Thursday, December 28, 2006
காமராஜ் - 101 [ # 1 ]
[ இது ஒரு மீள்பதிவு ]
தலைவர் (காமராஜ்) வழக்கம் போல தனது முன்அறையில் அமர்ந்து வந்தோரோடு அளவளாவியும், அனுப்பிக்கொண்டும் இருந்தார். நாங்கள் நால்வரும் (அரு.சங்கர், தனுஷ்கோடி, டி.எஸ்.டி.ராஜா, டி.ஏ.எம்.ஏ.மாரிமுத்து)முன்னேறி அறையில் இடம் பிடித்து விட்டோம்.அப்போது நாங்கள் சற்றும் எதிபாராத நிலையில் பதினெட்டு வயது இளைஞன் ஒருவன், மிக உரிமையுடன் தலைவர் முன் வந்து நின்றான்.அவன் கையில் ஒரு அச்சடிக்கப்பட்ட வெள்ளைதாளிருந்தது. "என்னடா கனகவேல், என்னா விஷயம்?...என்னது காகிதம்" கேட்டபடியே வாங்கி படித்தார்.இளைஞன் பேச ஆரம்பித்தான், "தாத்தா, எம்.பி.பி.எஸ்-க்கு அப்ளிகேசன் போட்டேன், இன்டர்வி நடந்திருச்சு, நீங்க சி.எம்-கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்கனா இடம் கிடைச்சுரும், லிஸ்ட் போடுறதுக்குள்ள சொல்லுங்க தாத்தா, எங்க குடும்பத்துல நான் ஒருத்தனாவது படுச்சி டாக்டராகி விடுவேன்" என கெஞ்சுகிறான்.தலைவரின் பக்கவாட்டில் மிக அருகில் நின்றிருந்த எனக்கு தலைவரின் கையில் இருந்த அந்த தாளின் சில வாசகங்கள் சில தெளிவாக தெரிந்தன. அதில்...
C/O THIRU. K. KAMARAJ
ALL INDIA CONGRESS COMITTEE PRESIDENT
8,THIRUMALAI PILAI ST
MADRAS-17
என ஒரு கேள்விக்கு பதிலாக எழுதி இருந்தது. தலைவரின் அடுத்த கேள்வியும் அது பற்றியதாகவே இருந்தது..."ஆமா, என் பேரை எதுக்கு எழுதினே?""இல்ல தாத்தா, என் மெட்ராஸ் அட்ரஸ் கேட்டிருந்தாங்க, எனக்கு உங்களை தவிர இங்கே வேறுயாரையும் தெரியாதே...இன்டர்வியூவலயும் கேட்டாங்க...தாத்தான்னு சொன்னேன்". அந்த இளைஞன் யாரென்பது இப்போதுதான் எனக்கு புரிந்தது. காமராஜரின் ஒரே தங்கை திருமதி. நாகம்மாளின் மகள் வழி பேரன்."கனகவேலு, இந்த டாக்டர் படிப்பு, இன்ஞினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவுங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாறுக்கும் பொதுவா கமிட்டியை போட்டுட்டு, பிறகு இவனுக்கு சீட் குடு, அவனக்கு சீட் குடுன்னு சிபாரிசு பண்றதுன்னா பிறகு அதுக்கு கமிட்டியே போட வேண்டியதில்லையே... நீ நல்லா பதில் சொல்லி இருந்தீன்னா உனக்கு கிடைக்கும். கிடைக்கலேன்னா பேசாம கோயமுத்தூரில் பி.எஸ்.சி அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு, அதிலே சேர்ந்து படி... அந்த படிப்புக்கு நல்ல எதிர் காலம் இருக்கும். என்னால் சிபாரிசு பண்ண முடியாது" என்று சொல்லி அவன் தந்த தாளையும் அவனிடம் தந்து அனுப்பிவிட்டார். அவனை அனைவரும் அனுதாபத்தோடு பார்த்தனர். அந்த வருடம் அவனுக்கு மருத்துவ படிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை.
-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: (12) நடுவு நிலைமை [சமநிலை போற்றல்)
குறள்:
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
பொருள்:
முதலில் சமமாக நின்று, பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்திக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால்
அமைந்து, ஒரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோர் அழகு.

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
14 Comments:
Christopher said...
தொடருங்கள்.. வாழ்த்துக்கள்!
June 28, 2005
????????? said...
வாழ்த்திற்க்கு நன்றி Christopher, நிச்சயாக தொடரும் எண்ணம் உள்ளது. மேலும் இப்பதிப்பை வாசிக்கும் நண்பர்களே, உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
நன்றி,
டண்டணக்கா.
June 28, 2005
நற்கீரன் said...
காமராஜ் படம் பார்த்து அவரை பற்றி சிறிது அறிந்து கொண்டேன். தமிழகத்துக்கு நல்ல எடுத்துகாட்டு. அவரை பற்றிய உங்கள் பதிவு நன்று.
June 29, 2005
டண்டணக்கா said...
நன்றி நற்கீரன். காமராஜ் பற்றி அதிகம் அறியாதவர்களுக்கா நான் அவரைப் பதிய துவங்கியுள்ளேன். தலைவன் என்ற இலக்கணத்திற்க்கு காமராஜை கண் மூடிக்கொண்டு காட்டலாம். தமிழன் இப்படிபட்ட தலைவனை கொண்டிருந்ததை நினைத்து சந்தோஷமடைகிறேன். தொடர்ந்து அவரைப் பற்றி பதிய இருக்கிறேன், கட்டாயம் படியுங்கள்.
-டண்டணக்கா
June 29, 2005
Anonymous said...
மனிதருள் மாணிக்கம் என்று யாரையோ சொல்கிறோமே! இவரல்லவா மாணிக்கம்.
June 29, 2005
Halwacity.Shummy said...
அண்ணாச்சி, நல்ல பதிவு. இப்படி நிறைய எழுதுங்கள்.
இந்த நேர்மை குணம் நாம் வாழும் இக்காலத்தில் காணக் கிடைக்காததாகிவருகிறது. உங்கள் எழுத்திலாவது அதை காட்டுங்கள்.
ஹம்ம் தங்கை மகனுக்கு மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கிக்கொடுக்க பரிந்துரை செய்யமாட்டேன்னாரு அவர், ஆனா இப்ப தன் மகனுக்கு முதலமைச்சர் பதவி, பேரனுக்கு அமைச்சர் பதவி, மகனுக்கு அமைச்சர்பதவி-னு வாங்கிக்கொடுக்க நிறைய ஆளுங்க இருக்காங்க. ஆனா இது தப்புனு ஒத்துக்க மாட்டாங்க. ஓ நேர்மையா அத நம்ம தொண்டர்களுக்கு போதிப்போம்-னு சொல்லுவாங்க.
June 29, 2005
--L-L-D-a-s-u--- said...
Thanks for this post ..Please continue..
June 29, 2005
Joe said...
படிச்சு முடிச்சதும் கண் கலங்கியது ..அந்த தலைவனையா தோற்கடித்தார்கள் பாவிகள்!
-ஜோ
June 30, 2005
Go.Ganesh said...
டண்டணக்கா டமக்குடப்பா எங்க தலைவரப் பாத்தீங்களா.....
June 30, 2005
டண்டணக்கா said...
அனானிமஸ், அல்வா சிட்டி அண்ணாச்சி, தாஸ், ஜொ, கொ.கணேஷ் - அனைவருக்கும் எனது நன்றிகள்.
அனானிமஸ், போலிகளுக்கு மத்தியில் உண்மையை அறிந்துகொள்வது நமது கடமை. நீங்கள் அறிந்துள்ளீர்கள், மகிழ்ச்சி.
-டண்டணக்கா.
அல்வா சிட்டி அண்ணாச்சி, ம்..ம்..ம்.. நடப்பு அரசியலா, உங்கள் ஆதங்கம் புரிகிறது, என்ன செய்ய ... காலம் மாறிப்பொச்சே!!!
தாஸ், கட்டாயமாக தொடரவுள்ளேன், மீண்டும் வாருங்கள்.
ஜோ, அது ஒரு வரலாறு, அதுவும் இத்தொடரில் பதியப்படும்.
கணேசு, புரியலேயப்பா... எந்த தலைவர ?
June 30, 2005
கோபி(Gopi) said...
டண்டணக்கா,
நன்றாய் இருக்கிறது. காமராஜ் பற்றிய உங்கள் பதிப்பை தொடருங்கள், அனைத்தையும் PDF கோப்பாய் தொடர்ந்து சேமிக்கலாம் என்றிருக்கிறேன்.
ஒரு வேண்டுகோள்:
காமராஜ் 101 என்ற பெயரில் தனி வலைப்பூ தொடங்கி எழுதுங்களேன்.(தினம் ஒரு ஜென் கதை போல). என் போன்று சேமிப்பவர்களுக்கு வசதியாய் இருக்கும்.
June 30, 2005
APDIPODU said...
இந்தத் தகவலை எங்கோ கேட்டிருக்கிறேன் அல்லது படித்திரிக்கிறேன்(?). உங்கள் பதிவைப் படித்தவுடன் பெருமூச்சே வருகிறது. கக்கன் அய்யா., காமராஜர் போன்றவர்கள் அமர்ந்த நாற்காலியும் இப்படி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்குமோ உணர்விருந்தால்?. இப்போதும் இருக்கிறார்கள் நல்லகண்ணு அய்யா., நெடுமாறன் அய்யா போன்றவர்கள்., அவர்களது நேர்மை பளபளப்பானது ஆனால் தோல் பளபளப்பு., பர்ஸ் பளபளப்பை பார்த்து மயங்கிப் பழக்கப்பட்ட நம் கண்களுக்கு., வெள்ளையுடை வெளியிலும், இருள் மனதிலுமாய் இருப்பவர்கள் தெரியும் அளவிற்கு அது தெரியவில்லை. எங்கோ பிறந்த சேகுவாராவைப் புகழ்ந்து (நிச்சயமாய் அது தவறில்லை., அவரைப் பற்றி நமக்குத் தெரிவது அவசியம்) எழுதுகின்ற நம் கரங்கள், நம் நாட்டில் இருந்த மாமணிகளைப் பற்றியும் எழுத வேண்டும். நிறைய எழுதுங்கள்.
June 30, 2005
டண்டணக்கா said...
கோபி, அப்படிபோடு - எனது நன்றிகள்.
கோபி - தனி "காமராஜ் 101" ப்ளாக்கிற்கு வேலைகளை துவக்கியுள்ளேன். எல்லா முகப்பு வேலைகள் மற்றும் தமிழ்மணத்தில் பதிவு வேலைகள் இனிமேல்தான்.
அப்படிபோடு, பெருமூச்சு மட்டுமா...காமராஜை பற்றி அறிய அறிய , நிகழ்காலத்தை எண்ணி நெஞ்சே வெடித்துவிடும். மற்றபடி, அந்த மாமணியை பற்றி பதிவது சாரப்பக, உங்களது கருத்துதான் என்னதும்.
தொடர்ந்து வாருங்கள்.
-டண்டணக்கா
July 03, 2005
எம்.கே.குமார் said...
http://mayavarathaan.blogspot.com/2005/07/blog-post_04.html
இந்தச்சுட்டி சொல்லும் சேதியைப் பாருங்கள்.
இதுதான் இன்றைய உலகம்!
அன்று அப்படி வாழ்ந்தது அவர்களீன் தப்பய்யா! அவர்களின் தப்பு!
டண்டணக்கா, தொடருங்கள்.
எம்.கே.குமார்
July 04, 2005

காமராஜரைப் போன்ற கர்மவீரரை இனிமேல் காண்பது அரிதென்றே படுகின்றது. அவருடைய வாழ்க்கை நமக்கெல்லாம் பாடம். அவரைப் பார்த்து ஒருவர் திருந்தினால் அதுவே நன்று.
ராகவன், பெரியவர் நம்ம வலைப் பூவுக்கு வந்திருக்கீங்க, வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
-டண்டணக்கா
-டண்டணக்கா
அருமையான முயற்சி
தமிழர் தலைவனை பற்றி படிக்கயில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அத்தகைய தலைவன் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே என்ற ஏக்கமும் தோன்றுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
கீதா

அறிஞர் அண்ணாவும் இவ்விடயத்திலே மிகவும் தன்னலமற்றவர்.
சத்தியமூர்த்தி சாதிவெறியிலே காமராஜரை வெறுத்ததையும் எழுதுங்கள் ஐயா
Post a Comment