Wednesday, July 05, 2006
காமராஜ் - 101 [ # 53 ]
காமராஜ் ஆட்சி பொறுப்பை ஏற்ற நேரத்தில் வட சென்னையில் விருதுநகர் நாடார் உறவின் முறை சங்கம் செயல்பட்டு வந்தது. அந்த சங்கத்தில் மகமை நிதியாக கொஞ்சம் தொகையும் இருந்தது. அந்த மகமை நிதியிலிருந்து ஏதாவது ஒரு உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என அச் சங்கக்ம் முடிவு செய்து, ஓர் உயர் நிலை பள்ளி துவங்க திட்டமிட்டு, அதற்கான் அனுமதி வேண்டி பொதுக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பம் செய்தார்கள். உயர் நிலை பள்ளி துவங்குவதற்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. தேவையான இடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம் இப்படி சில. இப்படிப்பட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் சங்கமும் உயர் நிலை பள்ளி தொடங்க அனுமதி கேட்டது. பொது கல்வி இயக்ககமும் அனுமதி குறித்த எந்த பதிலையும் அளிக்காமல் இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் முதல்வர் காமராஜிடம் சென்று சங்க பொறுப்பாளர்கள் முறையிட்டனர். பொது கல்வி இயக்குனரோடு காமராஜ் தொடர்பு கொண்டு, இது பற்றி பேசுவதற்க்கு சம்பந்தபட்ட துணை இயக்குனரை அனுப்பு வைக்குமாறு கேட்டுக் கொண்டார். தானே வருவதாக இயக்குனர் தெரிவிக்க, இந்த அனுமதி குறித்து என்ன முடிவு எடுத்துள்ளீகள் என் தெரிந்தௌ கொள்ள மட்டுமே வேண்டும், எனவே இந்த சிறிய தகவலுக்காக இயக்குனர் வர வேண்டியதில்லை, துணை இயக்குனரை அனுப்பி வைத்தால் போதும் என்று காமராஜ் கூறிவிட்டார்.
குறிபிட்ட நாளில் துணை இயக்குனராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு தலைமை செயலகம் சென்று காமராஜரை சந்தித்தார். முதலில் விதிமுறைகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்ட காமராஜ், சங்கத்தினர் விதிமுறைகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி விட்டார்கள், எவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டார். முதலமைச்சர் காமராஜர் விரும்புகிறபடி ஆணையிடுவதாக இயக்குனர் கூற சொன்னதாக் நெ.து.சுந்தர வடிவேலு பதிலளித்தார்.
உடனே, "இத்தகையவற்றை நான் விரும்புகிறேனா இல்லையா என்று பாராமல், விதிமுறைகளின் அடிப்படையில் முடிவு செய்வதே நிர்வாகதிற்கு நல்லது. உயர்நிலைப் பள்ளிக்கு, என்று, பொருத்தமான தனிக்கட்டிடம் இல்லாத நிலையில் சாதாரணமாகா என்ன அனுமதி கொடுப்பீர்கள்?" என்று காமராஜ் கேட்டார். பதிலுக்கு சுந்தர வடிவேலுவும் "புதிய கட்டடம் கட்டுவதை எதிர்பார்த்து முதல் மூன்று படிவங்களை தற்காலிகமாக அனுமதிப்போம், கட்டட வேலை முடிந்த பிறகு ஒன்பது, பத்து, பதினோறாவது வகுப்புகளை அனுபதிப்போம்" என்றார்.
காமராஜரும் அதை ஆமோதிக்கும் விதமாக, "சரியான போக்கே, வாக்குறிதியை நம்பி மட்டும் எடுத்த எடுப்பிலேயே, கேட்டதை எல்லாம் கொடுத்து விட்டால், அப்புறம் செயற்குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்த தொழிலை கவனிக்க போய்விடக்கூடும். அடியோடு அனுமதி மறுத்தால், ஊரார் மகமைப் பணத்தை செலவிட முடியாது. இதுவரை பின்பற்றும் நடைமுறை இனியும் தொடரலாம்" என்று ஆணையிட்டார். சுந்தரவடிவேலுவோ பணிவான குரலில்...
"தாங்கள் விருப்பினால் அவரகள் கேட்டுள்ள முதல் நான்கு படிவங்களையும் கொடுப்பதாக, இயக்குனர் என்னிடம் கூறி அனுப்பினார்" என்றார். ஆனால் காமராஜ் உறுதியோடு, "இந்த பள்ளிகூடம் தொடங்க போகிறவர்கள் எனக்கு வேண்டிய்வரகள்தான். அவரகள், அரசின் விதிமுறைக்கு கட்டுபட்டல்தான் மற்றவர்களை கட்டுபடுத்த முடியும், மூன்று படிவங்கள் கொடுத்தாலே போது என்று இயக்குனரிடம் சொல்லுங்கள்" என்பதோடு முடித்துக் கொண்டார்.
விதிமுறைகள் யாருக்காகவும் தளர்த்தப்படக்கூடாது, அப்படி நல்ல செயல்களுக்காக தளர்த்தப்பட்டாலும் கூட அது பொதுவாக அனைவருக்கும் பொருந்தக் கூடிய வகையிலே இருக்க வேண்டும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணிபுரியக் கூடியவர்கள் வளைந்து கொடுக்க விருபினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அப்படி ஏற்றுக் கொண்டால் பொதுவான தன்மை இல்லாமல் போய்விடும் என்பதையும்தான் காமராஜருடைய உறுதியான மனப்போக்கு வெளிப்படுத்துகிறது.
------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: நடுவு நிலைமை (12)
குறள்:
தகுதி எனஒன்று நன்றே, பகுதியால்
பால்பட்டு ஒழுகப் பெறின்.
பொருள்:
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்ப்டும் ஓர் அறம் மட்டுமே போதும்.
------------------------------
- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
அவர் தான் காமராஜர் இன்றைய அரசியலைப் பாருங்கள்
அதை விட இதற்கு வந்த பின்னூட்டத்தைப் பருங்கள் 100 இருக்குமா? இது தானய்ய உலகம்

முன்பெல்லாம் விதிகளை தளர்த்த மட்டுமே அரசியல்வாதிகளை நாடிய நிலையிருந்தது.
எல்லா விதிகளும் கடைபிடிக்கப்பட்டிருப்பின் அனுமதி தானே வரும்.
இப்போது விதிகள் கடைபிடிக்கப் படுகிறதோ இல்லையோ , எல்லாத்துக்கும் காசு கொடுக்கணும்.
எப்படியும் காசு கொடுத்தாதான் காரியம் நடக்கும், விதிகளைத் தூக்கி குப்பைல போடுங்கறேன்!!!!
நடுவு நிலைமை இப்பவும் இருக்கு. தெரிஞ்சவன் தெரியாதவன் என்று பாரபட்சம் பார்க்காமல் காசு வாங்குகிறார்கள்.

வாங்க என்னார் அய்யா, ரொம்ப நாளா ஆளே காணாம், மீண்டும் வந்து உற்சாகப் படுத்துவதற்க்கு நன்றி. பின்னூட்டத்த்யெல்லாம் கணக்கு பண்ணுனா... உங்களுக்கே தெரியும். நாம, பண்ணனும்னு நெனச்சத, பண்ணிகிட்டே இருக்கனும், அதுலயும் இந்த மாதிரியான சரியான விசயங்களையெல்லாம் விளைவை பத்தி கணக்கு பண்ணாமா, பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.
டண்டணக்கா அவர்களே,
(--- content moderated by blog author ---)
நீங்கள் பின்னூட்ட கணக்கைப் பார்த்து தயவு செய்து நிறுத்திவிடாதீர்கள்.
- By: வெட்டிப்பயல் - 7/06/2006

வாங்க வெ.பயல், உங்க கமெண்ட ஆட்சேபனை காரணமா, ஒரு வரிய வெட்ட வேண்டியதாகிறுச்சு.
வருகைக்கு நன்றி, மத்தபடி பிண்ணூட்ட கணக்கு பூஞ்ஞியமா இருந்தாலும், என்னோட புராஜக்ட், அதாங்க இந்த தொடர் போயிட்டுதான் இருக்கும்.
Post a Comment