Thursday, June 15, 2006

--------

காமராஜ் - 101 [ # 44 ]

1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார். ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் "அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்" என்றார்கள். ஆனால் காமராஜ் "அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்" என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார். முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.


பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
"சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசதுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்."

------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை (63)

குறள்:
மடுத்தவாய் எல்லாம் படடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து.

பொருள்:
செல்லும் வழிகளில் எல்லம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் தமிழகத்துக்கு முதலமைச்சராக இருந்தது நாம் செய்த பாக்கியம்.

அவர் செயலை பாராட்டி எழுதியதில் அறிஞர் அண்ணா அவர்களும் தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
என்ன சொல்லிப் பாடிடுவேன்!
எப்படி நான் அழுதிடுவேன்!
என் மன்னன் காமராசன்
எம்மையெல்லாம் காத்ததை
என்ன சொல்லிப் பாடிடுவேன்!
எப்படி நான் அழுதிடுவேன்!
 
I doubt either Jayalalitha or Karunanidhi who claim themselves followers , disciples of Annadurai would do this. Karunanidhi never praised Jayalalitha for the "bits " of right things to the public. Jayalalitha neither and will never ever do that. Long live Annaism.
 
இந்த மாதிரி ஒரு தலைவர் இருந்தார் என்பதை நம்பவே முடியவில்லை.
இரண்டு தலைமுறைக்குள் இவ்வளவு மாற்றமா?
உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

BTW, I have given this URL in Orkut (Kamarajar) Communities, so that the message reaches the people. So Please Continue this Good work.

-பாலாஜி
 
அந்த காலத்தில் ஆரசியல் நாகரிகம் எப்படி இருந்தது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
 
காமராஜரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குச் சொல்வது மிகவும் முக்கியம்! தொடரட்டும் உங்கள் பணி!
 
வாங்க டோண்டு, வருகைக்கு நன்றி.

எஸ்.கே, தொடர்ந்து வர்ரீங்க, ரொம்ப சந்தோசம்.

வாங்க ராஜ்மோகன், சரிதான் அவங்க ரெண்டுபேருக்கும் மத்தில நடக்குறது வாய்பே இல்ல.

வாங்க பாலஜி, நன்றி. ஆர்குட் எப்ப்டி இருக்கு, நல்லா இருந்தா சொல்லுங்க, நாங்களு சேர்ந்துக்கிறோம்.

வாங்க சந்தோஷ், உண்மைதான்.

வாங்க சேரல், வருகைக்கு நன்றி.
 
Post a Comment<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?