Friday, December 30, 2005

--------

காமராஜ் - 101 [ # 14 ]

தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பழக்கமிருந்தது, சபரிமலை அய்யப்பன் என்ற கேரள மாநிலக் கோயிலுக்கும், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கும் தரும் முக்கியம் நமது தமிழகத் தெய்வங்களுக்கு தருவதில்லை.

இந்த பக்தி விசயம் தமிழகத்தை பொருளாராதரீதியாகவும் பாதித்து வருகிற ஒரு விஷயம். திருப்பதி ஏழுமலையானின் உண்டியல் வருமானம், பழனி திருக்கோயில் பெரும் வருமானத்தைவிட பல நூறு கோடிகள் அதிகம்.

காமராஜர் காலத்திலும் இதே நிலைதானிறுந்தது. திருமலைப் பிள்ளை வீதியில் வாழ்ந்த தலைவர் இதை எண்ணி ஆதங்கப்பட்டார். ஆன்மீகத் திருக் கூட்டம் தன்மீது வசை பொழிந்தாலும் பரவாயில்லை என்று ஒதுக்கிவிட்டு தன் மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பேசினார் " தமிழ் நாட்டு பக்தர்கள் மிக அதிக அளவில் காணிக்கையை திருப்பதி கோயில் உண்டியலில் கொண்டுபோய் செலுத்துகிறார்கள். நம் நாட்டு ஸ்ரீரங்கம் எந்த வகையில் திருப்பதிக்கு குறைந்தது கிடையாதே... உங்கள் காணிக்கையை ஸ்ரீரங்க உண்டியலில் போட்டால் நம் நாட்டுக்கு பெரிய பயனாக இருக்கும். மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்குப் பயன்படும். நம்ம சாமியும் பெரிய சாமிதான்" என்பதே காமராஜின் வேண்டுகோள்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: அவை அஞ்சாமை(73)

குறள்:
வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.

பொருள்
சொற்களின் தொகையறிந்த தூய அறிவுடையவர், கற்றோர் அவையில் அஞ்சாமல் சொல்லின் வகையறிந்து வாய் சோராமல் பிழையின்றி பேசுவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, December 29, 2005

--------

காமராஜ் - 101 [ # 13 ]

தாம்பரத்தில் ஒரு பள்ளித்திறப்பு விழாவுக்குச் சென்ற காமராஜ் அப்போது அங்கு வசித்த ஜீவாவையும் அழைத்துச் செல்லலாம் என நினைத்து அவரில்லம் சென்றபோது, ஜீவா வாழ்ந்த நிலை கண்டு அதிர்ந்து போனார். உடுத்த மாற்றுடை கூட இல்லாத நிலையில் துவைத்த ஆடையை உலர்த்திக் கொண்டிருந்தார் ஜீவா.

சொல்வேறு, செயல்வேறாக வாழும் தலைவர்களிடையில், ஜீவா தன் கொள்கையை உபதேசித்தபடியே வாழ்ந்த வைரக்கல்.

அவரது இல்லற ஓடத்தை ஓரளவேனும் இன்பம் ஏந்தி செல்லும் வகையில் ஜீவாவின் துணைவியார் திரு. பத்மாவதி அம்மையாருக்கு ஒரு அரசு பணி தந்து ஆதரித்தார்.

பொதுவுடமை நாடானா ரஷ்யா சென்று திருப்பிய சில நாட்களில் ஜீவா திடீரென சுகவீனமுற்றார்.

1963 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்க்கு முன் சிம்மெனத் தமிழகம் முழுவதும் கர்ஜணை செய்த ஜீவா கடைசியாக பேசிய சொற்கள்

"பத்மாவதிக்கு தந்தி கொடு... காமராஜருக்கு டெலிபோனில் செய்தி சொல்" இவைமட்டுமே. மறுநாள் காலை 7:30 மணிக்கு அவர் உயிர் மூச்சு அடங்கியது.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: நட்பு (79)

குறள்:
புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்

பொருள்:
நட்பு கொள்வதற்கு நெருங்கிப் பழக வேண்டும் என்பதில்லை. இருவருக்கும் ஒத்த உள்ளத்து உணர்ச்சியே நட்பு செய்வதற்க்குரிய தோழமையைக் கொடுக்கும்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

--------

காமராஜ் - 101 [ # 12 ]

அந்த அமைச்சர் சார்ந்த துறையில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரு மனக்குறையிருந்தது. தனது அறைக்கு அழைத்து பேச வரும் அதிகாரிகளுக்கு ஆசனம் கூட தராமல், நீண்ட நேரம் நிற்க்க வைத்தே பேசிவிட்டு அனுப்பினார் அமைச்சர்.

அதிகரிகளுக்கு இந்த மனக்குறையை முதல்வரிடமே முறையிடுவதென முடிவெடுத்து ஒரு அதிகாரியை காமரஜரிடம் அனுப்பினர். அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச்செய்து, வந்த விவரங் கேட்க, அவர் அமைச்சர் தங்களை அவமதிப்பது போல் நடந்துகொள்ளும் விசயத்தைக் கூறினார்.

கேட்ட காமராஜ், " அந்த தம்பி அப்படியா நடந்துக்கிறார், அது தப்பாச்சே" என சொல்லிய வண்ணம் அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்து தனது அறைக்கு வருமாறு கூறினார்.

அந்த அதிகாரிக்கு சங்கடமாகிவிட்டது, நேரிடையாக அமைச்சரிடம் கேட்டு கடிந்து கொள்ளப்போகிறார் என பயந்துவிட்டார்.

இதற்குள் அமைச்சரும் வந்துவிட்டார். அந்த அதிகாரி எழுந்து நிற்க்க, காமராஜ் " நீங்க உட்காருங்க!" என்று சொல்லியவண்ணம் வந்த அமைச்சரையும் பக்கத்து இருக்கையில் அமரச் சொல்லிவிட்டார்.

பின்னர் அமைச்சரின் துறை சார்ந்த ஒரு திட்டம் பற்றி விவாதிப்பது போல பேசி " சரி, நல்லா பார்த்துக்கோங்க!" என்று சொல்லி அமைச்சரை அனுப்பிவிட்டார்.

அமைச்சர் சென்ற பின்பு, அந்த அதிகாரியை பார்த்து " இனி நீங்க போகலாம்... உங்களுக்குறிய மரியாதை இனி கிடைக்கும்" என்று அனுப்பிவைத்தார்.

அதுமுதல் அமைச்சரின் நடவடிக்கையில் மாற்றம்.

முதல்வர் எவ்வளவு நளினமாக நடந்துக்கொண்டு தங்கள் உள்ளக்குமுறலைத் தீர்த்து வைத்தார் என்பதையெண்ணி அதிகாரிகளனைவரும் வியந்தனர்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: சொல்வன்மை (65)

குறள்:
பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்

பொருள்:
சொல்ல வேண்டியவற்றை சில சொற்களால் சுருங்கச் சொல்லத் தெரியாதவர் வீணாகப் பல சொற்களால் விரித்துப் பேசுவார்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Wednesday, December 28, 2005

--------

காமராஜ் - 101 [ # 11 ]

காமராஜ் முதலமைச்சராக இருந்த போது மதுரைக்கு சென்றார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் மாளிகையிலோ இரவு மின்சாரம் இல்லை. ஊழியர்கள் வந்து பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். காத்திருந்த காமராஜ், " கட்டிலைத் தூக்கி மரத்தடியில் போடு" என்றார்.

அறைக்குள்ளிருந்த கட்டிலை வேப்பமரத்தடியில் கொண்டுவந்து போட்டார்கள்.

காமராஜ் படுக்க வந்தார். கட்டில் அருகே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.

" நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய்ப் படு" என்று போலிஸ்காரரை அனுப்பிவைத்த காமராஜ் சில நொடிகளில் உறங்கிவிட்டார்.

இந்த எளிமை உலக வரலாற்றில் எந்த மக்கள் தலைவரிடமும் காண்பது அரிது.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: சான்றான்மை (99)

குறள்:
ஊழி பெயரினும் தாம்பெயரார், சார்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

பொருள்:
சான்றான்மை எனப்படும் கடலுக்கு கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தான் மாறமாட்டார்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Tuesday, December 27, 2005

--------

காமராஜ் - 101 [ # 10 ]

ஏழு ஆண்டு காமராஜ் ஆட்சியினை கண்டபின், பெரியார் ஆற்றிய உரையின் பகுதி இதோ காணுங்கள்...

" தோழர்களே, எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆனால் நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூற வேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைகாரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.

தோழர்களே, என் சொல்லை நம்புங்கள், இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது."

( இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4வது மாநாடு 9.7.1961-ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி - 17.7.1961 விடுதலை)

-------------------------------------------------------------------
பால்: குடியியல்

அதிகாரம்: பண்புடைமை (100)

குறள்
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு

பொருள்:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, December 22, 2005

--------

காமராஜ் - 101 [ # 9 ]

மருத்துவப் படிப்பு தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்தே பயிற்சிக்காலதில் எவ்வித உதவித்தொகையும் வழங்கப்பட்டதில்லை. பயிற்சி மருத்துவர்கள் தங்களின் தேவைகளுக்கு தங்கள் கை காசை போட்டே பயிற்சியை முடித்தனர். பயிற்சி மருத்துவர்கள் அவ்வபோது துறை சார்ந்த அமைச்சர்களிடம் எடுத்துக் கூறியும், பாறையில் முட்டிய கதையாகவே முடிந்தது.

காமராஜ் அரசில் அத்துறையின் அமைச்சரும் மாணவர்கள் தரும் விண்ணப்பத்தை வாங்குவதோடு சரி, எவ்வித தீர்வும் எடுக்கவில்லை. இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் இருபது பேர் கூடி காமரஜரை சந்தித்து தங்கள் கோரிக்கையை சொல்வதென முடிவெடுத்தனர். அக்குழுவில் இன்றைய பிரபல மருத்துவர்கள் சிலரும் இருந்தனர். அக்குழுவினர் முதல்வரை சந்திக்க தலைமை செயலகம் சென்றனர். அன்றைய பணிமுடித்து வெளியேறுகையில் காமராஜரிடம் விஷயத்தைக் கூற, உடனே அவர்களைப் பார்க்க வந்தார்.

" நீங்களெல்லாம் யாரு?" காமராஜ்.
" ஐயா நாங்களெல்லாம் ஹவுஸ் சர்ஜன்ஸ்".
" அப்படின்னா என்ன" காமராஜ்.
" ஐந்து வருஷம் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருஷம் பயிற்சி டாக்டராக வேலை பார்க்கிற்வர்கள். நாங்கதான் இந்த ஒரு வருசத்துல வருகிற நோயாளிகளை சோதிப்பது, அவசர சிகிச்சை செய்வது, இரவும் பகலும் வார்டுகளில் நோயாளிகளை பார்த்துக்கிறது. இந்த ஒரு வருஷ பயிற்சிக்கு பிறகுதான் நாங்க டாக்டரா வெளிய வேலை பார்க்க முடியும்."
" சரி ...இப்ப என்னை எதுக்கு பார்க்க வந்தீங்க" காமராஜ்.
" ஐயா, இந்த ஒரு வருச பயிற்சி காலத்துக்கு எங்களுக்கு எதாவது உதவித் தொகை STIPEND தரனும்னு கேட்டுக்கிட்டுக்கோம். மந்திரி அம்மா பார்க்குறேன், செய்றேன்னு சொல்றாங்களே தவிர எதுவும் செய்யமாட்டேங்றாங்க".
" இதென்ன அநியாயமா இருக்கு ...5 வருஷம் படிச்சுட்டு ஒரு வருசம் ஓசியா வேலை வாங்குறது சரியில்லையே... சரி நீங்க போங்க, நான் அதை என்னனு பார்க்கிறேன்" காமராஜ் அனைவரையும் குப்பிட்டு அனுப்பினார்.

நான்காம் நாள், பயிற்சி டாக்டர்களுக்கு மாதம் ரூ.105 சம்பளமும், கடந்துவிட்ட ஆறு மாதங்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டுமென்ற் உத்தரவு வந்தது.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: வினைச்செயல்வகை (68)

குறள்:
தூங்குக தூங்கிச் செயற்பால்; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

பொருள்:
காலந் தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழ்த்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Tuesday, December 20, 2005

--------

காமராஜ் - 101 [ # 8 ]

திரு எஸ்.டி.சுந்தரம் அவர்களுக்கு நெஞ்சிலே அமைதியில்லை. அல்லும் பகலும் உழைத்து, ராக்கெட் வேகத்தில் முன்னேற்றமடையச் செய்து, தமிழகத்தை இந்தியாவில் இரண்டாம் இடத்திற்க்கு கொண்டுவந்துவிட்டபோதும், பொதுத் தேர்தலில் எதிர் கட்சியாக, வெறும் மேடை முழக்க வாதிகளாயிருக்கும் திராவிட முன்னேற்ற கழகம், தன் ஆதரவு வாக்காளர் விகிதத்தை உயர்த்திக்கொண்டே வருவது புரியாத புதிராக அவரை உறுத்தியது.

அவருக்கு தோன்றியதெல்லாம், காமராஜ் அரசு தன் சாதனைகளை பாமர மக்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்லாமையே. இந்தியாவில் அதிகளவு திரையரங்குகளை கொண்டிருந்த தமிழ் நாட்டின் திரையுலகின் பெரும்பங்கை திராவிட முன்னேற்ற் கழகத்தினரே கையகப்படுத்தியிருப்பதை உணர்ந்தார். அந்த சாதனத்தை காங்கிரசும் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென முடிவெடுத்து தலைவர் காமரஜரை சென்று கண்டார்.

"ஐயா, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற சாதனைகளை நீங்களும் உங்கள் நல்லாட்சியும் செய்திருந்தாலும் நமக்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவு எதிர் கட்சிக்கே செல்வதைப் பார்க்கும் போது நாம் நமது சாதனைகளை மக்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதில் சற்றே பின் தங்கி இருக்கிறோம் என நினைக்கிறேன்" என்றார்.

அவர் கருத்தை கூர்ந்து கேட்ட காமராஜ், "சரி அதற்கென்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க?" என்று அவரிடமே யோசனை கேட்டார். அதற்க்கு கவிஞர் "ஐயா, திரைபடங்கள் மிக வலிமை மிக்க சாதனங்கள். மூலை முடுக்குகலுகெல்லாம் நாட்டு நடப்புகளை கொண்டு செல்வது அவைதான். இதை நாமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது ஆட்சியின் சாதனைகளையெல்லாம் தொகுத்து ஒரு செய்திப் படம் ஒன்று தயாரித்து வெளியிட்டால் எல்லா தரப்பு மக்களையும் அவை சென்றடையும்." என்றார்.

" நாம்ப மக்களுக்குகாகச் செய்கிற காரியங்களை நாம்பளே விளம்பரப்படுத்தனுமா ? ... சரி, இதுக்கு எவ்வளவு செலவாகும்" என்று காமராஜ் கேட்டார்.

"சுமாரா மூனு லட்சம் இருந்தா எடுத்திரலாம்னு நினைக்கிறேன் ஐயா" என்றார் கவிஞர்.

"ஏ...யப்பா...மூனு லட்சமா? மக்கள் தந்த வரிப்பணத்தில் நமக்கு விளம்பரமா? அந்த மூனு லட்சம் இருந்தா நான் இன்னும் மூனு பள்ளிக்கூடத்தை திறந்திடுவேனே...வேண்டாம்...படமெல்லாம் எடுத்துக் காட்ட வேண்டாம்" என்று சொல்லி கவிஞரை அனுப்பிவிட்டார்.

-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை (3)

குறள்:
நிறைமொழி மாந்தர் பெருமை, நிலத்து
மறைமொழி காட்டி விடும்

பொருள்:
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

--------

காமராஜ் - 101 [ # 7 ]

அன்று காமராஜரை பார்க்க வந்தவர் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி. தன் இல்லத் திருமணத்திற்க்கு வரவேண்டுமென்று கேட்டு அழைப்பிதழோடு வந்திருந்தார். அவரை அழைத்து அமரச் செய்து நலங்கேட்டார். அதே நேரத்தில் அவருடைய வசதியற்ற வாழ்க்கை நிலையை அவரது சொற்கள் மூலமாக புரிந்து கொண்டார்.

தனது உதவியாளரை அழைத்துக் கேட்பது போலக் கேட்டு அந்த திருமணனாளில் தனக்கு வேறு அலுவல் இருப்பதாகக் கூறி விழா சிறப்பாக அமையத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அனுப்பிவிட்டார். வந்தவர் மனம் மிக வருந்தி விடைப்பெற்றார். ஆனால் அவருடைய உள்ளத்தில் " ஹூம் ... காமராஜ் இன்று பெரிய தலைவராகி விட்டார். அந்தக் காலத்தில் நாமும் அவரோடு போராட்டங்களில் ஈடுபட்டோம். ஒரே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தோம். ஆனால் இன்று மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் எற்பட்டுவிட்ட நிலையில் ஏழையான தன் வீட்டுக்கு வருவதற்கு அவரது அந்தஸ்த்து இடம் தருமா?" என்றெல்லாம் எண்ணியவண்ணம் ஊர் போய் சேர்ந்தார்.

விழா நாளும் வந்தது. அந்த சிற்றூரில் தன் பொருளாதார வசதிக்கேற்ப மிக எளிமையாக விழாவை நடத்திக் கொண்டிருந்தார். திடீரென அந்த வீதியில் பரபரப்பு, ஆரவார ஒலி கேட்டு அந்த தியாகி வெளியே வந்தார். அவர் கண்களையே நம்ப முடியவில்லை. வந்து நின்ற காரிலிருந்து காமராஜ் இறங்கினார். புன்னகை பூத்தமுகத்தோடு தியாகியின் கைகளைப் பற்றினார்.

தியாகிக்கோ கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அவரைத் தட்டிக் கொடுத்த வண்ணம், 'வா, விழா மேடைக்குப் போவோம்' என்று கூறிய வண்ணம் மண்டபத்தின் உள்ளே சென்றார், மணமக்களை ஆசீர்வதித்தார். அவரைச் சரியான ஆசனத்தில் கூட அமர்த்த முடியவில்லையே என்று அந்தத் தியாகி ஏக்கத்தோடு செயலற்று நின்றார்.

அப்போது காமராஜ் பேசினார். "நீ அழைப்பிதல் கொடுத்த அன்றைக்கே நான் வர்றதுக்கு முடிவு செஞ்சிட்டேன். ஆனா நான் அப்பவே வர்றதாச் சொல்லியிருந்தா முதலமைச்சரே வர்றார்ன்னு சொல்லி கடனை வாங்கித் தடபுடலா பண்ணியிருப்ப, உன்னை மேலும் கடன்காரனாக்க நான் விருப்பல. இப்ப வந்துட்டேன், உனக்கு திருப்தி தானே" என்றார். கூடியிருந்த கூட்டத்தை பெருமிதத்தோடு பார்த்தார் அந்தத் தியாகி.

"சரி...வரட்டுமா... மேல் கொண்டு காரியத்தை கவனி" என்று சொல்லி விட்டு விடை பெற்றார் காமராஜ்.

நட்பில் பழைமை என்ற ஒரு அதிகாரத்தையே எழுதிய வள்ளுவரின் வைர வரிகளுக்கு ஓரிலக்கியமாகத் திகழ்ந்தவர் காமராஜ்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: பழைமை(81)

குறள்:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பொருள்:
பழைய நட்பை மறவாது பொற்றுபவர், பகைவராலும் விருப்பப்படுவார்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

--------

காமராஜ் For Dummies

வணக்கம்.

"டண்டணக்கா" வில் எழுதிவந்த "காமராஜ் For Dummies" என்ற எனது தொடர் பதிவை, நண்பர் கோபி(Gopi) -யின் ஆலோசனைப்படி "தினம் ஒரு ஜென் கதை" போல "காமராஜ் 101" என்ற இந்த தனி வலைப் பதிவிற்க்கு மாற்றியுள்ளேன். இனிமுதல் காமராஜ் தொடர் இப்புதிய வலைப் பதிவிலிருந்து தொடரும்.

எனது "அடிப்படை சோம்பேறித்தனத்தாலும்", பள்ளி(அலுவலக) சூழ்நிலை காரணமாகவும் "காமராஜ் 101" தொடர் பதிவை பல/சில வாரங்கள்/மாதங்கள் எழுத தவறிவிட்டேன்.

கடந்த சில நாட்களாக எனது சோம்பலை வெற்றி கொண்டதன் மூலம், இத் தொடரின் முதல் பகுதிக்கு தேவையான பதிவுகளை நெருக்கி தயார் செய்துவிட்டேன், இன்னும் எழுத்துபிழை மற்றும் பார்மெட் வேலைகள் மட்டும் பாக்கி. இதன் மூலம் புது வலைப் பூவில் தொடர்ந்து பல பதிப்புகள் கொடுக்க முடியுமென நினைக்கிறேன் (!!!).

சில வலைப் பதிவுகளில், ஒவ்வொரு பதிப்பையும் PDF கோப்பாக பார்க்கும் வசதிகள் இருப்பதை பார்த்தேன். தெரிந்த நண்பர்கள் செய்முறை கூறினால், உதவியாக இருக்கும்.

இப்படிக்கு,
டண்டணக்கா

Monday, December 19, 2005

--------

...

==========================
பதிப்பிற்க்கு பயன் தந்த நூல்கள்:
==========================
1) திருக்குறள் எளிய தெளிவுரையும் பொன்மொழியும் - ஆ.வே.இரா (திருவள்ளுவர் பதிப்பகம்)
2) திருக்குறள் - சாலமன் பாப்பையா (ஜெயா பதிப்பகம்)
3) பெருந்தலைவர் காமராசர் - அரு.சங்கர் (மணிவாசகர் பதிப்பகம்)
4) காமராஜ் ஒரு சகாப்தம் - எ.கோபண்ணா (சூர்யா பப்ளிகேசன்ஸ்)
5) காமரஜரின் பொற்கால ஆட்சி - க.சக்திவேல் (அவ்வை வெளியீடு)

Other Link-1
Other Link-2
http://arivagam.blogspot.com/2006/12/blog-post_116512075309488909.html

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?