Monday, January 08, 2007

--------

காமராஜ் - 101 [ # 4.a ]

(தொடர் நான்கு மிகப் பெரிய பதிவாக இருக்கும் காரணத்தால், வாசிக்க எளிதாக சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.)

தமிழினத்திற்க்கு, மக்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட காமராஜ், கல்வித் துறையில் ஆற்றிய கடமைகள்:

(1) பள்ளிகள்: இந்தியா விடுதலை பெற்ற போது அப்போதைய ஒருங்கினைந்த சென்னை மாநிலத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகள் எண்ணிக்கை 15,303. பின்பு 6000 பள்ளிகள் மூடப்பட்டன. அதுவே தனி மாநிலமாக அமைந்த பின்பு, காமராஜ் ஆட்சியின் இறுதியில் 1963-ல் மொத்தமாக 30,020 தொடக்கப்பள்ளிகளாக வள்ர்ச்சிப்பெற்றது. இடைநிலை கல்வியை பொறுத்த வரை 1954-ல் 1006 பள்ளிகளில் மொத்தம் 4,89,115 மாணவர்கள் பயின்றனர். இது காமராஜின் ஆட்சியில் ஏறக்குறைய இரண்டு மடங்காகியது.

(2) கல்வி மேம்பாடு: காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954-ல் 6 வயதிலிருந்து 11 வயது வரையிலான பள்ளி பிள்ளைகளிள் 45% மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963-ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80% குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். 1954-ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963-ல் பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக (47,44,091) உயர்ந்தது. கல்வித் துறையில் காமராஜ் செய்த புரட்சி, தமிழ் நாட்டு மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் 'ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை" என்கிற நிலை காமராஜ் காலத்தில் உருவாயிற்று.

(3) மதிய உணவுத் திட்டம்: குழந்தைகளின் பசியைப் போக்கி எழுத்தறிவிக்கக் காமராஜ் செயல்படுத்திய மதிய உணவு திட்டம் (இன்றைய சத்துணவு).

(4) பள்ளி வளர்ச்சித் திட்ட மக்கள் இயக்கம்: 'பள்ளி வளர்ச்சித் திட்ட மக்கள் இயக்கம்' என்பதை உறுவாக்கி, மக்ககளை கல்வி வளர்ச்சிக்கு உதவ முன் வரச் செய்தார். இந்த இயக்கத்தை தொடங்கிய 25 மாதங்களில், தமிழகமெங்கும் 133 மாநாடுகளை நடத்தி 4 கோடி ரூபாய் பணத்தையும், 2.47 கோடி பெறுமானமுள்ள பொருள்கள் நன்கொடையாகப் பெற்றார். மொத்தமாக 167 பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தி 24,565 பள்ளிகள் தன்னிறைவுப் பெறச்செய்தார்.

(5) உயர்நிலைக் கல்வி: தேவையான அளவு நவீன வசதிகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளிகள், ஐந்து மைல் தூரத்திற்கு ஒன்றாக அமைக்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளி அளவிலேயே, ஏட்டுக் கல்வியோடு தொழி துறை சார்ந்த கல்வியை கற்பிக்க "தொழில்சார் கல்விமுறை" அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய கல்வித் திட்டத்தால் உயர்நிலைப் பள்ளி அளவிலேயே - எஞ்னியரிங், அக்ரிகல்ச்சர், செக்ரடேரியல் கோர்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி முதலான தொழில் சார் கல்வி கற்க வழி வகுத்தார்.

(6) கட்டாய / இலகசக் கல்வி: தமிழகம் முழுவதும் 6- 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாய கல்வி, மற்றும் அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது. மேலும் கல்வித்துறை மூலமாகவே சீருடை வழங்க ஏற்பாடு செய்தார்.

(7) கல்லூரிகள்: இரண்டு பல்கலைகழகங்கலுடன் 39 கலை, அறிவியல் கல்லூரிகளை 1954-ல் கொண்டிருந்த தமிழ்நாடு 1963-ல் அதே இரண்டு பல்கலைகழகங்கலுடன் மொத்தம் 63 கலை, அறிவியல் கல்லூரிகளுடன் உயர்ந்து இருந்தது. 1954-ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகள் காமரஜின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் 209-ஆக உயர்ந்தது.

(8) நூலகங்கள்: நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.

தொடர் நான்கு முழுவதையும் வாசிக்க...

Comments: Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?