Wednesday, April 26, 2006

--------

காமராஜ் - 101 [ # 37 ]

காமராஜரின் நிர்வாக திறமை பற்றியும், அவர் பிரச்சனைகளை அணுகும்முறை பற்றி, அவர் கீழ் பணியாற்றிய தலைமை செயலாளர் டபிள்யூ. ஆர். எஸ். சத்தியநாதன் கூறியுள்ளதை கீழ் காணலாம்.

" சென்னை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளராகக் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஐந்தாண்டுகள் மகிழ்ச்சியுடன் பணியாற்றினேன். நான் அவர்முன் எவ்வளவு பெரிய பிரச்சனையை வைத்தாலும், அது எத்தனை சிக்கல் வாய்ந்ததாக இருப்பினும் ஒரு நொடியில் முடிவுக்கு வந்து விடுவார். பிரச்சனைகளை அவர் அனுகும்முறை நேராடியாக இருக்கும். அவருடைய தீர்ப்பு மிகத் தெளிவாக இருக்கும். நாங்கள் வார்த்தை சிலம்பாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதே கிடையாது. எதையும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதே இல்லை. வியக்கத்தக்க வேகத்தில் பிரச்சனையைக் கண்டுபிடித்து விடுவார். அதேபோல் தம்மிடம் பிரச்சனைகளைச் சொல்ல சொல்ல வருவர்களுடைய குணத்தை மின்னல் வேகத்தில் எடை போட்டு விடுவார். அவருடைய ஆலோசனைக்கு நான் எழுதி வைக்கும் பைல் முழுவதையும் மிகக் கவனமாக படிப்பார். நன்றாக ஐயமறப் புரிந்துகொள்வார். அதன் பின்பே தீர்மானிப்பார்" என்று பெருமிதத்தோடு கூறியுல்ளது உற்று நோக்கத்தக்க தாகும்.

-------------------------------------------------------------------
பால்:
அதிகாரம்: பண்புடைமை (100)

குறள்:
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு

பொருள்:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
-------------------------------------------------------------------

- Bய்: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Monday, April 24, 2006

--------

காமராஜ் - 101 [ # 36 ]

தமிழகத்தை மின்மயமாக்குவதில் காமராஜ் அரசு மிகப் பெரும் சாதனை படைத்தது. மின்மயமாக்குதலுக்கு அளிக்கப்பட்ட நிதியிலிருந்து இத்தகைய சாதனையை செய்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத் ஒன்றாக இருந்தது. ஏனெனில் எல்லா மாநிலங்களிலும் ஒரு கிராம மின்மயமாக்குதலுக்கென திட்டமிட்டு செய்யப்பட்ட செலவுத் தொகை ரூ. 80,000. இந்த அளவு தொகையை கொண்டு உறுதியாக மிகப்பெரிய எண்ணிக்கையில் கிராமப்புற மின்மயமாக்குதலை மேற்கொள்ள இயலாது என்பதை உணர்ந்த காமராஜ் அரசு, கிராமபுற மின்மயமாக்கலுக்கு விரைந்து, குறைந்த செலவில் மெற்கொள்ள எளிய திட்டத்தை ஏற்படுத்தியது. அதன்படி, மின்மயமாக்கலுக்கு உள்ளூர் பொருட்களே பெரும்பாலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. திட்டத்தின் படி தமிழக் மின்சார வாரியமே, சொந்த பணி மனைகளை மாநிலத்தின் பல இடங்களில் பரவலாக ஏற்படுத்தி பொருட்களை வடிவமைத்துக் கொண்டது.

இதன் காரணமாக, கிராம மின்மயமாக்குதல் செலவுத் தொகை வெகுவாக குறைக்கப்பட்டு, பல மடங்கு அதிகமான கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டன. தமிழகத்தின் இந்த செயல்பாடுகளை அறிந்த மத்திய அரசின் திட்டக்குழு, ஓர் ஆய்வுக்குழுவை நியமித்து முழுமையான ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அதே முறையை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஆணையிட்டது.

------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: அமைச்சு (64)

குறள்:
கருவியும், காலமும், செய்கையும், செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

பொருள்:
ஒரு செயலை செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Sunday, April 23, 2006

--------

காமராஜ் - 101 [ # 35 ]

காமராஜ் அரசு செயல்படுத்திய பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை முன்பு பார்த்தோம்.

குறிப்பாக பெரியாறு மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம் முதலிய அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்களை நிறைவேற்றி முடித்ததனால், காமராஜ் அரசு கிராமப்புறங்களை விரைந்து மின்மயமாக்க முடிந்தது.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கிராமப்புற மின்மயமாக்குதலில் தமிழ்நாடு மிகப் பெரிய சாதனை செய்திருந்தது. 1963-ம் ஆண்டு இந்தியா முழுவதும் மின்மயமாக்கப்பட்ட 5000 மக்கள் தொகை கொண்ட கிராமங்கள், நகரங்களின் மொத்த எண்ணிக்கை 32,500. இதில் தமிழகத்தில் மட்டும் இந்த 5000 மக்கள்தொக அடிப்படையில் 657 நகரங்களும் 6777 கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்களின் 1963 மார்ச் எண்ணிக்கை கீழ்வருமாறு:

( *** Please scroll down couple of pages, the content continues after it. *** )

மாநிலங்கள்

நகரங்கள்

கிராமங்கள்
ஆந்திரப் பிரதேசம் 392 2712
அஸ்ஸாம் 20 72
பீகார் 186 2244
குஜராத் 182 954
கேரளா 467 1316
மத்திய பிரதேசம் 129 477
சென்னை
657 6777
மகாராஷ்ரா 259 1352
மைசூர்(கர்நாடகா) 192 2889
ஒரிசா 38 177
பஞ்சாப் 199 4225
ராஜஸ்தான் 113 145
உத்திரப்பிரதேசம் 300 4388
மேற்கு வங்காளம் 124 382

மேலும் இதே எண்ணிக்கை இரண்டாம் ஐந்தாண்டு திட்ட கால முடிவில், 1966 வாக்கில் 22,103 கிராமங்கள் மின் இணைப்பை அனுபவித்தன. இதில் குறிப்பிடத்தக்கது, முதல் ஐந்தாண்டு திட்டம் தொடங்கிய காலத்தில், 813 கிராமங்கள் மட்டுமே மின் இணைப்பை பெற்றிருந்தன. இவ்வளவு வீரியமான கிராமிய மின்மயமாக்கலுக்கு காரணம் இத்துறையில் காமராஜ் அரசின் சீரிய செயல்பாடே. இந்த கிராமிய மின் இணைப்பு, கிணற்று மற்றும் பம்பு செட்டு பாசன பெருக்கத்திற்க்கு பெரு துணையாக அமைந்தது.

------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: வினைதிட்பம் (67)

குறள்:
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

பொருள்:
செயல்திறம் பற்றி சொல்லுதல் எல்லோருக்கும் எளிது. சொல்லியபடி செய்து முடிப்பது அரியதாம்.

------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Friday, April 21, 2006

--------

காமராஜ் - 101 [ # 34 ]

காமராஜ் அரசு மின் உற்பத்தியை பெருக்கவதிலும், கிராமப் பகுதிகளை மின்மயபாக்குவதிலும் அதிக சிரமம் எடுத்துக் கொண்டது. காமராஜ் ஆட்சியேற்ற போது, தமிழகத்தில் மேட்டூர், பைக்கரா, பாபநாசம் எனும் மூன்று மின்னுற்பத்தி தலங்களை மட்டுமே இருந்தது.

காமராஜ் பதவியேற்றதும், முதல்/இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் நான்கு பெரிய மற்றும் சிறிய நீர்மின் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. ஆனால் அரசின் வருமானமோ வெறும் 45 கோடி, முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் சென்னை மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையோ 95 கோடி.

நீர்மின் திட்டங்கள்:
1. குந்தா நீர் மின் திட்டம் ( 26 கோடி )
2. பெரியாறு மின் திட்டம் ( 10 கோடி) - இது திருவாங்கூர்-கொச்சி அரசோடு பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொண்டது.
3. கும்பார்-அமராவதி மின் திட்டம் ( 8 கோடி )
4. மேட்டூர் கீழ்நிலை திட்டம் (12 கோடி )
5. மோயாறு நீர்மின் திட்டம்
6. கூடலூர் நீர்மின் திட்டம்

அனல்மின் திட்டங்கள்:
1. நெய்வேலி அனல்மின் திட்டம்
2. சமயநல்லூர் அனல்மின் நிலையம்
3. சென்னை அனல்மின் நிலையம் (மூன்றாவது மின் உற்பத்தி பிரிவு)

அணுமின் திட்டங்கள்:
1. கல்பாக்கம் அணுமின் திட்டம்.

குறிப்பாக பெரியாறு மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம் முதலிய அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்களை நிறைவேற்றி முடித்ததனால், காமராஜ் அரசு கிராமப்புறங்களை விரைந்து மின்மயமாக்க முடிந்தது.

மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு ஆகியவற்றைச் சீராகவும் செம்மையாகவும் செயல்படுத்த காமராஜ் அரசு, மின் வாரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். மின்சாரத்தை வணிக நோக்கில் லாபகரமாக விநியோகிக்கவும், அன்றாட நடைமுறைகள கவனிக்கவும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் மின் வாரியம் அமைக்கப்பட்டது. இத்திட்டங்களால், சென்னை மாநில அரசு, காமராஜ் ஆட்சி காலத்தில், மின்சாரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவதில் இந்தியாவில் முதல் மாநிலமாக விளங்கியது, நீர் மின் உற்பத்தி திறனில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது.

இவையனைத்தையும் தன் முதிர்ந்த அனுபவக் கூட்டாளியான திருவாளர்கள் பக்த்வத்சலம், சுப்பிரமணியம், வெங்கட் ராமன் துணையுடன் நிறைவேற்றினார் காமராஜ்.

மேலும் காமராஜ் பதவி விலகிய 1963-ம் ஆண்டு நிறைவேற்றுப்பட்டு கொண்டிருந்த திட்டங்களில் குறிப்பிடக் கூடியவை - சாண்டிய நல்லூர் நீர்மின் திட்டம், குந்தா திட்டத்தின் மூன்றாவது பிரிவு, பெரியர் நீர்மின் திட்ட இரண்டாவது பிரிவு, பரம்பிக்குளம் நீர்மின் திட்டத்தின் பல பகுதிகள். இவை மட்டுமின்றி ஒகேனக்கல், பாண்டியாறு, புன்னம்புழா, மேல் தாமிரபரணி, சுருளியாறு, பரலியாறு ஆகிய நீர்மின் திட்டங்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, செயல்படுத்தக் கூடிய நிலையை காமராஜ் அரசு ஏற்படுத்தியது.

இந்த வகையில் தமிழ் நாட்டில் நிறுவப்பட்ட மின் திட்டங்கள் மூலமாக, மின்சக்தி திறன் 1963 ஏப்ரல் 1-ஆம் தேதியன்று 6,30,700 கிலோவாட்டாக உயர்ந்தது. காமராஜ் பொறுப்பேற்ற போது 156 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, 571 மெகாவாட்டாக உயர்ந்தது.

------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: குடி செயல் வகை (103)

குறள்:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

பொருள்:
என் குடியையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு முன்வந்து நிற்கும்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Thursday, April 20, 2006

--------

காமராஜ் - 101 [ # 33 ]

இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் பெரிய அணைகள், நீர் தேக்க ஏரிகள் சார்ந்த பணிகளை செய்தது காமராஜ் அரசு. காமராஜர் ஆட்சியின் ஒன்பது ஆண்டுகளில் பெரிய அணைத் திட்டங்களால் மட்டும் ஏறக்க்குறைய 3,73,436 ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதி பெற்றது.

மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தில் சிறிய நீர் பாசண திட்டங்களை செம்மைபடுத்த தொடங்கியது.

நீர் பாசனத்திற்க்கு பயன்பட்டு வந்த குளங்களை செம்மை படுத்தியது; தூர் வாரி ஆழப்ப்டுத்தியது; சிதைந்த குளங்களை மீட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. வானம் பார்த்த பூமியில் இந்த சிறிய நீர் பாசன திட்டங்கள் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்க்கு பெரிதும் உதவின. இத்திட்டத்தின் கீழ், வடிகால் நீர் கசிவுக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டன.

விவசாயிகளுக்கு கிணறு வெட்ட 25% மானியத்துடன் நீண்ட கால தவணைக் கடன் வழங்கப்பட்டது. பாசனத்திற்க்கு பயன்படும் ஆயில் என்ஞின்களும், மின் பம்பு செட்டுகளும் தவணை முறைக் கடனில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. காமராஜின் ஆட்சியில் தமிழ் நாட்டின் நிலப்பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட 150 லட்சம் ஏக்கரில், 56 லட்சம் ஏக்கர் நிரந்தர நீர்பாசண வசதியை பெற்றது. இதன் மூலம், தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.

சென்னை மாநிலத்தின் பல கிராமங்கள், நீர்ப்பாசனத்திற்க்கு பயன்படும் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பை பெற்றன. காமராஜ் ஆட்சி காலத்தில் தொடங்கிய மின் பம்ப் செட் இணைப்புகள், முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் 14,626 ஆகவும், இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் 75,193 ஆகவும், மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில், 1966-ல் 2,60,000 ஆகவும் அதிகரித்தன. இதனால் கிணற்றுப் பாசன வசதி பெருகி, காமராஜ் பதவி விலகிய 1963-ம் ஆண்டிலேயே, விவசாய உற்பத்தி அதிகரித்துச் சென்னை மாநிலம் "மிகு தானிய உற்பத்தி நிலையை" கண்டது.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: குடி செயல் வகை (103)

குறள்:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையில் பீடுஉடையது இல்.

பொருள்:
தன் குடியை உயர்த்தும் கடமை செய்வதில் கை சோர மாட்டேன் எனும் பெருமையே மிக உயர்ந்ததாகும்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

--------

காமராஜ் - 101 [ # 32 ]

தமிழகத்தின் மேற்க்கெல்லையில் அமைந்த சிற்றூர் ஆனைமலை. உயர்ந்து செல்லும் மலைப் பகுதியில் சென்றால் கரிமலை, ஒரு கொம்பன்மலை, சுங்கமலை, பரம்பிக்குளம் மலை இவற்றிடையே பொழியும் மழை நீர் பரம்பிக்குளம் ஏரியாக உருவெடுத்து நில அமைப்பு காரணமாக கிழக்கிலிருந்து மேற்காக ஓடி கேரளாவில் புகுந்து கடலில் கலந்து கொண்டிருந்தது.

தமிழகத்து நீர், நிலவமைப்பின் காரணமாக மேற்கே ஓடி வீணாகக் கூடாது. இந்த நீர் முழுமையும் தமிழகத்துக்கே திருப்பிவிடப்பட வேண்டும் என்று அத்துறை நிபுணர்களை திட்டமிடச்சொன்னார் காமராஜ். அன்றைய கேரள அரசோடும் சகோதரத்துவ உணர்வோடு பேச்சுவார்த்தை நடத்தினார், வெற்றி பெற்றார்.

மலைமுகடுகளின் அமைப்பை ஆய்ந்தனர். மலையைக் குடைந்து மேற்கே ஓடும் நீரைக் கிழக்கு முகமாகத் திருப்பிவிடலாம். ஆனால் வரும் நீருக்கு கொள்ளிடம் வேண்டும். அதையும் கண்டுபிடித்தனர். பொள்ளாச்சி நகருக்கு தென்பால் வால்பாறை மலையில் அடிவாரத்தில் இயற்கையன்னை அமைத்திருந்த ஆழியாற்றிலே நீரை சங்கமித்துவிடச் செய்துவிடலாமென முடிவெடுத்தனர்.

பரம்பிக்குளம்-ஆழியார் திட்டம் உருவம் பெற்றது. இதைக் காணும் மேனாட்டு நீர் வழித்துறை அறிஞர்களனைவரும் இது அரும் சாதனை என வியக்கின்றனர்.

அவருக்குப் பின் வந்த முதல்வர்களெல்லாம் செய்யும் சின்னஞ்சிறு திட்டங்களுக்கெல்லாம் மலையளவு விளம்பரம் செய்தார்கள், செய்கிறார்கள்.

ஆனால் மலையயே குடைந்து அனைவரையும் மலைக்க செய்த காமராஜ் சிறுகுன்று மணியளவு கூடத் தன் தோளை உயர்திக்காட்டவில்லை.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: பெருமை (98)

குறள்:
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்,
அருமை உடைய செயல்

பொருள்:
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Wednesday, April 19, 2006

--------

காமராஜ் - 101 [ # 31 ]

நீலகிரி மலை மீது திட்டமிடப்பட்ட குந்தா மின் திட்டம் நிறைவேற்ற முப்பது கோடி தேவைப்பட்டது. ஆனாலும் நிதியமைச்சர் திரு சி.எஸ் மலைக்கவில்லை. முதல்வர் ராஜாஜியின் அனுமதியோடு மத்திய அரசின் நிதி அமைச்சர் திரு. தேஷ்முக்கின் உதவியை நாடினார்.

கிழக்காசிய நாடுகளின் முன்னேற்றத்திற்க்கு செல்வந்த நாடுகள் மானியங்கள் தந்து உதவ வேண்டுமென்ற கொளும்பு திட்ட அடிப்படையில் கனடா நாட்டின் உதவியை திரு. தேஷ்முக் பெற்றுத்தந்தார். குந்தா திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் துவங்கிவிட்டன.

ஆனால் நாட்டிலேற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளில் சில மாற்றங்களேற்பட்டன. சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலக காமராஜ் முதல்வரானார். 1956ல் நேரு அரசு எடுத்த அவசர முடிவான பம்பாய் நகரத்தை மராட்டியத்துடன் இணைக்காமல் குஜராத் மாநிலத்துக்கு தருவது என்பதில் மனமொப்பாது திரு. தேஷ்முக் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.

ஆனால் அவரது முயற்சியின் நன்கொடையால் குந்தா திட்டம் நாளும் வளர்ந்து முற்றுப்பெற்றுவிட்டது.

இப்பொது அதை யார் திறந்து வைப்பது என்ற கேள்வி எழுந்தது. நாட்டின் முதல்வர் காமராஜர். திட்டத்துக்கு உதவியவரோ தேஷ்முக். வேறு யாராக இருந்தாலும் அந்த பெருமை தனக்கே கிடைக்க வேண்டும் என்று விருப்புவர்.

ஆனால் காமராஜரோ தேஷ்முக் அவர்கள் பதவியில் இல்லாவிட்டாலும் அவரே திறக்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார். சம்மதிக்க மறுத்த் தேஷ்முக்கையும் திரு.சி.எஸ் மூலம் சம்மதிக்க வைத்துப்பின் 1956 ஆம் ஆண்டு தேஷ்முக் திறந்தார்.

--------------------------------------------------
பால்: அறத்துப்பால்

அதிகாரம்: செய்ந்நன்றியறிதல் (11)

குறள்:
தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

பொருள்:
நன்றியறிதலின் பயனை ஆராய்ந்தவர், பிறர் செய்த தினையளவு சிறிய நன்மையையும், பனையளவு பெரிதாகாகக் கருதிப் போற்றுவர்.
--------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?