Thursday, April 20, 2006

--------

காமராஜ் - 101 [ # 32 ]

தமிழகத்தின் மேற்க்கெல்லையில் அமைந்த சிற்றூர் ஆனைமலை. உயர்ந்து செல்லும் மலைப் பகுதியில் சென்றால் கரிமலை, ஒரு கொம்பன்மலை, சுங்கமலை, பரம்பிக்குளம் மலை இவற்றிடையே பொழியும் மழை நீர் பரம்பிக்குளம் ஏரியாக உருவெடுத்து நில அமைப்பு காரணமாக கிழக்கிலிருந்து மேற்காக ஓடி கேரளாவில் புகுந்து கடலில் கலந்து கொண்டிருந்தது.

தமிழகத்து நீர், நிலவமைப்பின் காரணமாக மேற்கே ஓடி வீணாகக் கூடாது. இந்த நீர் முழுமையும் தமிழகத்துக்கே திருப்பிவிடப்பட வேண்டும் என்று அத்துறை நிபுணர்களை திட்டமிடச்சொன்னார் காமராஜ். அன்றைய கேரள அரசோடும் சகோதரத்துவ உணர்வோடு பேச்சுவார்த்தை நடத்தினார், வெற்றி பெற்றார்.

மலைமுகடுகளின் அமைப்பை ஆய்ந்தனர். மலையைக் குடைந்து மேற்கே ஓடும் நீரைக் கிழக்கு முகமாகத் திருப்பிவிடலாம். ஆனால் வரும் நீருக்கு கொள்ளிடம் வேண்டும். அதையும் கண்டுபிடித்தனர். பொள்ளாச்சி நகருக்கு தென்பால் வால்பாறை மலையில் அடிவாரத்தில் இயற்கையன்னை அமைத்திருந்த ஆழியாற்றிலே நீரை சங்கமித்துவிடச் செய்துவிடலாமென முடிவெடுத்தனர்.

பரம்பிக்குளம்-ஆழியார் திட்டம் உருவம் பெற்றது. இதைக் காணும் மேனாட்டு நீர் வழித்துறை அறிஞர்களனைவரும் இது அரும் சாதனை என வியக்கின்றனர்.

அவருக்குப் பின் வந்த முதல்வர்களெல்லாம் செய்யும் சின்னஞ்சிறு திட்டங்களுக்கெல்லாம் மலையளவு விளம்பரம் செய்தார்கள், செய்கிறார்கள்.

ஆனால் மலையயே குடைந்து அனைவரையும் மலைக்க செய்த காமராஜ் சிறுகுன்று மணியளவு கூடத் தன் தோளை உயர்திக்காட்டவில்லை.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: பெருமை (98)

குறள்:
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்,
அருமை உடைய செயல்

பொருள்:
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
-------------------------------------------------------------------


- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
டண்டணக்கா நல்லா எழுதிறீங்க வாழ்த்துக்கள் நடுவுல சில காலம் காணாம போயி இருந்திங்க ஆனா எப்ப திரும்பவும் வந்திங்கன்னு தெரியலை இதுக்கு மேல தொடர்ந்து வர வேண்டியது தான்.
 
This MAN has no parallel nor comparison!

We were fortunate to have Him with us and are currently CURSED for defeating Him!

Now is the time for redemption!
 
//currently CURSED for defeating Him!//

100% true words.
 
இனியொரு தலைவர் இவர் போல் வரார்.
யோகன்
பாரிஸ்
 
வாங்க சந்சோஷ், எஸ்.கே, சிவபாலன், யோகன்... வந்து வாசித்து, மறுமொழியிட்டதற்கு நன்றி, தொடர்ந்து வாங்க.
 
வலைப்பூ நண்பரே வணக்கம்!
நம்மைப் போன்ற நண்பர்களால் தொடங்கப்பட்ட "நம்பிக்கை" கூகுள் குழுமம் தனது முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை ஆரோக்கியமான போட்டிகள் மூலம் கொண்டாடுகிறது. நீங்களும் கலந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்!
நம்பிக்கை ஊட்டுங்கள் நம்பிக்கை பெறுங்கள்!
நன்றி!
இவண்,
நம்பிக்கை நண்பர்கள்
கூகுள் குழுமம்.
http://groups-beta.google.com/group/nambikkai/
 
Post a Comment<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?