Friday, March 17, 2006

--------

காமராஜ் - 101 [ # 24 ]

நம்பிக்கையின் நாயகமாக திகழ்ந்தவர் காமராஜ். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகில் ஒரு பார்வையற்றோர் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. தனியார் அறக்கட்டளையை சார்ந்த பள்ளி, அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பல ஏக்கர் பரப்பை கொண்டிருந்த அந்தப் பள்ளியின் வளாகம், அமைச்சர் ஒருவரின் பார்வையில் பட்டுவிட்டது. அந்த பள்ளியை வேறு ஒரு இடத்துக்கு மாற்றிவிட்டால், அந்த இடத்தை வேறு ஒரு காரியத்திற்க்கு பயன்படுத்தலாம் என்று அவர் திட்டமிட்டார். இதை அறிந்ததும் காமராஜ் கொதித்துப் போய்விட்டார். மாற்றும் முயற்சியை தடுத்து நிறுத்தினார்.

அப்போது அவர் கூறினார் " மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் நம்மிடம் நம்பிக்கையோடு கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இந்தப் பள்ளியை நடத்தாமல் போனால் மட்டும் நம்பிக்கை துரோகமல்ல, இந்த இடத்தை மாற்றினாலே நம்பிக்கை துரோகம்தான். அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளையே சரியா நடக்கவில்லை என்றால் மற்றவர்கள் எந்த நம்பிக்கையோடு அறக்கட்டளைகளை நிறுவ முன்வருவார்கள். சாமர்த்தியமான பேச்சு நப்பிக்கையை காப்பாற்றாது. நாணயமாக நடந்துக்கணும், அப்போதுதான் நாலுபேர் நம்புவார்கள்."

-------------------------------------------------------------------
பால்: குடியியல்
அதிகாரம்: பண்புடைமை (100)

குறள்
நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்
பண்புபா ராட்டும் உலகு

பொருள்:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
இதே முறையில் தான் மன்னர் மாணியத்தை தலைவர் எதிர்த்தார்
நாட்டை மன்னர்கள் இந்திய அரசிடம் ஒப்படைக்கும் போது நாங்கள் மன்னர்களாக இருந்து விட்டோம் எங்களை நம்பி பல குடும்பங்கள் உள இனி நாங்கள் எப்படி செலவுசெய்வது பணத்துக்கு எங்கே போம் என்றதற்கு பட்டேல் உங்களுக்கு மானியம் மாதாமாதம் வழங்குவோம் என்றார்
அதைத்தான் அன்னை இந்திரா அவர்கள் ஒழிக்கும் போது தலைவர் அவர்களுக்கு அன்று சொன்ன வாக்குறுதி என்னாவது என்றார் பதில் இல்லை அதான் எதிர்த்தார்
 
வாங்க என்னார் அய்யா. எனக்கு ஏனோ ... கொடுத்த வாக்கிற்க்காக வாழ்ந்து மடிந்த கர்ணன் ஞாபகம் வருகிறது. சில புத்தகங்கள் படிக்கும் போது, நெஞ்சில் புத்தக்கத்தை சாத்திவிட்டு, வாசித்த விசயத்தை மனம் ஆராய தொடங்க்கிவிடும். காமரஜரை பற்றி படித்த போது, எனக்கு அதே நிகழ்வு அடிக்கடி ஏற்ப்பட்டது. புத்தகம் தமிழில் இருந்தாலும், படித்து முடிக்க மாதங்கள் பல ஆனது. ஆச்சர்யத்தின் பல உச்சங்களுக்கு என்னை கொண்டு சென்றது அந்த வாசிப்பு. அது ஏற்படுத்திய பாதிப்பும் அதிகம். நான் அறிந்த வரையில், மனித இனத்தில் இதுவரை தோன்றிய சிறந்த தலைவர்களில் இவரும் அடங்குவார்.
 
அன்பு நண்பரே. நான் வலைப்பூக்களுக்குப் புதிது. கடந்த ஒரு வாரமாகத்தான் உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். அந்த மக்கள் தலைவனைப் பற்றி எத்தணை முறை பிறர் பேசக்கேட்டாலும், என்னால் அந்த நேரத்தில் வாழ (படிக்க) முடியாம போச்சே என்ற ஏக்கம் நோகடிக்கிறது. இனி அவரைப்போல் ஒரு தலைவனை, சிறந்த அரசியல்வாதியை நான் செத்துப்போகும் முன்னர் காண்பேனா என்று மலைப்பாக இருக்கிறது. காமராஜரைப் பற்றி சிந்திக்கையில், மறுபிறவி என்ற ஒன்று இல்லாமல் போனது கண்டு மனம் நோகிறது. அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் எழுதினால் செயற்கையாகத்தான் இருக்கும். தயவு செய்து உங்களால் முடிந்த அளவு காமராஜர் பற்றிய செய்திகளை ஓரிடத்தில் வையுங்கள். மிக்க நன்றி
 
வாங்க பாரதி, தொடர்ந்து வாங்க ...
 
இதுவே இன்றைக்கு இருக்கும் ஏதாவது ஒரு திராவிட முதல்வராக இருந்தால் அந்த அமைச்சரைக்கூப்பிட்டு தனக்கும் அதில் ஒரு பங்கு வேண்டும் என்று கேட்டு இருப்பார்.
 
Post a Comment<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?