Tuesday, January 10, 2006

--------

காமராஜ் - 101 [ # 20 ]

காமராஜ் முதல்வராக இருந்தபோது அவரது அன்னையாருக்கு செலவுக்கு மாதம் ரூ.120 கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதவில்லை என்பதற்கு அன்னையார், முருக தனுஷ்கோடியிடம் ஒரு காரணத்தைக் கூறினார்.

" அய்யா முதல் மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது? ஆகையால், அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று கேட்டுக் கொண்டார். முருக தனுஷ்கோடி சென்னை வந்ததும் காமராஜிடம் சொன்னார். ஆனால் அவரோ 120 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டார். " யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் சேந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்துவரும் 120 ரூபாயே போது" என்று சொல்லிவிட்டார்.

அதேபோல், அன்னையார் தமது மகள் நாகம்மாளின் மகன் ஜகவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வீட்டில் கக்கூஸ் அமைக்க பக்கத்தில் ஒரு இடம் ரூ.3000 த்துக்கு வாங்க வேண்டும் என்றும் முருக தனுஸ்கோடியிடம் கூறினார்.

ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி?

இதில் உள்ள நியாயத்தை உணர்ந்த தனுஷ்கோடி, காமராஜை சந்தித்துக் கூறினார். உடனே காமராஜ் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ" என்று கோபமாக பேசி அனுப்பினார்.

ஆனால் ஒரு தடவை " போர்வை வேண்டும்" என்று அன்னையார் எழுதிய கடிதத்தைப் பார்த்த காமராஜ், உடனே வாங்கி அனுப்ப எற்பாடு செய்தார். அதே போல் " டேபிள் பேன் வேண்டும்" என்று கடிதம் மூலம் கேட்டதும், அதையும் வாங்கி அனுப்பினார்.

அவர் வகித்த முதலமைச்சர் பதவி, அவரது வாழ்க்கை நிலையில் எந்த மாற்றத்தையும் எற்படுத்த அனுமதித்ததில்லை.

-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்

அதிகாரம்: அடக்கமுடைமை (13)

குறள்:
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்;
மலையினும் மாணப் பெரிது.

பொருள்:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
ஆகா அற்புதமான காமராஜைப் பற்றிய செய்தி. நான் படித்து என் தமிழல்லாத நண்பர்களுக்கு சொல்கிறேன். காமராஜரை பற்றிய செய்திகள் அனைத்தும் குழந்தைகளுக்கும் கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டியவை.

செய்திக்கு பொறுத்தமான திருக்குறளை கொடுக்கிறீங்க.
 
பெயரை பாத்து ஆகா இது ஒரு மார்கமான பதிவு நிறைய தடவை தவிர்த்து இருக்கே. ஆனா பெயரைப் போலவே வித்தியாசமான பதிவு தான். அதுல அந்த குறள் தான் சும்மா நச்சுகான்னு இருக்கு.
 
வாங்க பரஞ்சோதி , வாழ்ந்த காலத்திலேயே அவர் மீது வடநாட்டில் நல்ல அன்பு இருந்தது. கட்டாயம் குழந்தைகள் அறிய வேண்டும், தலைமை என்றால் என்ன என்று அவர்கள் சரியாக் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது உள்ளவர்களை பார்த்து இதுதான் தலைமை என்று நம்ப ஆரம்பித்தார்கள் என்றால், தலைமை என்ற சொல் மீதே ஒரு வெறுப்பு வந்துவிடும். முடுஞ்ச அளவு தேடி ஓரளவு சரியான குறள் குடுக்க முயற்சிக்கிறேன், ஆனால் இன்னும் நல்லா பண்ணலாம்னு தெரியுது, நேரம்தான் சரியா மாட்ட மாட்டிங்குது:)

வாங்க சந்தோஷ், பேரப் பாத்து இப்டி பயப்படலாமா :) நீங்க நெனச்ச மார்க்கமா இல்லேன்னு நினைக்கிறேன். வருகைகும் வாழ்த்திற்க்கும் நன்றி. தொடர்ந்து வாங்க.
 
அருமையான செய்தி. படிக்கும் போதே மனதுக்கு ஒரு இதம் கொடுக்கிறது. ம்ம்ம்ம். எல்லாம் அந்த காலம். நன்றி டண். தொடருங்கள்.
 
என்ன நண்பரே!

வேலைப்பளூ அதிகமா?
 
துக்ளக் சோ அவர்கள் அப்பப்போ; காமராஜரைப் பற்றி விதந்துரைத்தெழுதியதைப் படித்து;ஆச்சரியப்பட்டுள்ளேன்; நீங்கள் தொடர்ந்து தரும் தகவல்கள் சுவையாகவும் ஆச்சரியமாகவும்; இருக்கிறது.
தொடரவும்.
யோகன்
பாரிஸ்
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?