Friday, January 06, 2006

--------

காமராஜ் - 101 [ # 18 ]

குஜராத் பல்கலைக் கழகம் தனது பேரவையைக் கூட்டி, இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் நினைத்து பாராத அளவில் கல்வித் துறையில் செயற்கரிய சாதனைகள் செய்தமைக்காக "டாக்டர்" பட்டம் தர தீர்மாணம் போட்டு காமராஜை தேடி வந்தார்கள். வந்தவர்களிடம் காமராஜ் என்ன சொன்னார் தெரியுமா?

" டாக்டர் பட்டமா? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க. அதெல்லாம் வேண்டாம்... நாட்டில் எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறாங்க... அவுங்களை தேடிப்புடுச்சு இந்த பட்டத்தை குடுங்க. எனக்கு வேண்டாம்... நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன்... போய்வாங்க" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

டாக்டர். ஐன்ஸ்டீன் மகாத்மா மறைவின் போது விடுத்த செய்தி- " இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த நிலவுலகத்தில் ஊனோடும் உதிரத்தோடும் உலவினார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்பவே மறுப்பர்".

காமராஜரை பற்றி முற்றிலும் அறிந்தவர்களின் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெருமை (98)

குறள்:
பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

பொருள்:
பெருமைப்பட்டுக்க் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைபட்டுக்கொள்வது சிறுமை.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
பீஷ்மாச்சாரியா விருது தலைவருக்குத் தான் முறையாக கொடுத்திருக்கவேண்டும் நாட்டிற்காக அவர் திருமணம் செய்யவில்லை இவரும் திருமணம் செய்து கொள்ள வில்லை இன்னம் நிறைய சொல்லாம்
 
நன்றி,நன்றி மிக அற்புதம்.இப்போதுதான் படிக்க ஆரம்பிதுள்ளேன்.விமர்சிக்கிறேன்,
தங்களது மின்னஞ்சல் முகவரியைத் தரமுடியுமா?எனது சிலக் கருத்துக்களை தனியாக கூறுவதுதான் முறையாகும்.
 
நன்றி,நன்றி மிக அற்புதம்.இப்போதுதான் படிக்க ஆரம்பிதுள்ளேன்.விமர்சிக்கிறேன்,
தங்களது மின்னஞ்சல் முகவரியைத் தரமுடியுமா?எனது சிலக் கருத்துக்களை தனியாக கூறுவதுதான் முறையாகும்.
 
வாங்க என்னார், பீஷ்மாச்சாரியா விருது ஒன்று இருக்கிறதா? எனில், நீங்களி கூறியது போல காமராஜ் கட்டாயம் அந்த விருதுக்கு பெருமை சேர்க்க கூடிய தேர்வாகத்தான் இருப்பார்.

வாங்க rnateshan, வருகைக்கு நன்றி. வாசித்த பின்பு கட்டாயம் விமர்சனம் எழுதுங்கள், எதிர்பார்க்கிறேன். My id is "dandanakka_blog AT yahoo DOT com", feel free to write.
 
மிகவும் அற்புதமானவர் காமராஜர், இன்றைய அரசியல்வாதிகளிடமிருந்து எத்தனை காத தூரம் விலகி இருக்கிறார்.

இன்றையவர்களோ தங்கள் பெயரில் கல்வெட்டு, தெருப்பெயர், ஊர்ப்பெயர், பேருந்துக்கு என்று எல்லாம் வைத்து இன்பம் அடைகிறார்கள்.

என்னார் அண்ணா சொன்னது மிகச்சரி. பீஷ்மாச்சாரியாரை விட பலமடங்கு உயர்ந்தவர் காமராஜர்.
 
தன்னலம் இல்லாத நல்ல தலைவர்களுல் அவரும் ஒருவர். மக்களும் மாறிவிட்டனர், மன்னர்களும் மாறி விட்டனர்.
 
வாங்க பரஞ்சோதி மற்றும் சந்தோஷ், வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
 
Post a Comment<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?