Friday, April 21, 2006

--------

காமராஜ் - 101 [ # 34 ]

காமராஜ் அரசு மின் உற்பத்தியை பெருக்கவதிலும், கிராமப் பகுதிகளை மின்மயபாக்குவதிலும் அதிக சிரமம் எடுத்துக் கொண்டது. காமராஜ் ஆட்சியேற்ற போது, தமிழகத்தில் மேட்டூர், பைக்கரா, பாபநாசம் எனும் மூன்று மின்னுற்பத்தி தலங்களை மட்டுமே இருந்தது.

காமராஜ் பதவியேற்றதும், முதல்/இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் நான்கு பெரிய மற்றும் சிறிய நீர்மின் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. ஆனால் அரசின் வருமானமோ வெறும் 45 கோடி, முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் சென்னை மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையோ 95 கோடி.

நீர்மின் திட்டங்கள்:
1. குந்தா நீர் மின் திட்டம் ( 26 கோடி )
2. பெரியாறு மின் திட்டம் ( 10 கோடி) - இது திருவாங்கூர்-கொச்சி அரசோடு பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொண்டது.
3. கும்பார்-அமராவதி மின் திட்டம் ( 8 கோடி )
4. மேட்டூர் கீழ்நிலை திட்டம் (12 கோடி )
5. மோயாறு நீர்மின் திட்டம்
6. கூடலூர் நீர்மின் திட்டம்

அனல்மின் திட்டங்கள்:
1. நெய்வேலி அனல்மின் திட்டம்
2. சமயநல்லூர் அனல்மின் நிலையம்
3. சென்னை அனல்மின் நிலையம் (மூன்றாவது மின் உற்பத்தி பிரிவு)

அணுமின் திட்டங்கள்:
1. கல்பாக்கம் அணுமின் திட்டம்.

குறிப்பாக பெரியாறு மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம் முதலிய அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்களை நிறைவேற்றி முடித்ததனால், காமராஜ் அரசு கிராமப்புறங்களை விரைந்து மின்மயமாக்க முடிந்தது.

மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு ஆகியவற்றைச் சீராகவும் செம்மையாகவும் செயல்படுத்த காமராஜ் அரசு, மின் வாரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். மின்சாரத்தை வணிக நோக்கில் லாபகரமாக விநியோகிக்கவும், அன்றாட நடைமுறைகள கவனிக்கவும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் மின் வாரியம் அமைக்கப்பட்டது. இத்திட்டங்களால், சென்னை மாநில அரசு, காமராஜ் ஆட்சி காலத்தில், மின்சாரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவதில் இந்தியாவில் முதல் மாநிலமாக விளங்கியது, நீர் மின் உற்பத்தி திறனில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது.

இவையனைத்தையும் தன் முதிர்ந்த அனுபவக் கூட்டாளியான திருவாளர்கள் பக்த்வத்சலம், சுப்பிரமணியம், வெங்கட் ராமன் துணையுடன் நிறைவேற்றினார் காமராஜ்.

மேலும் காமராஜ் பதவி விலகிய 1963-ம் ஆண்டு நிறைவேற்றுப்பட்டு கொண்டிருந்த திட்டங்களில் குறிப்பிடக் கூடியவை - சாண்டிய நல்லூர் நீர்மின் திட்டம், குந்தா திட்டத்தின் மூன்றாவது பிரிவு, பெரியர் நீர்மின் திட்ட இரண்டாவது பிரிவு, பரம்பிக்குளம் நீர்மின் திட்டத்தின் பல பகுதிகள். இவை மட்டுமின்றி ஒகேனக்கல், பாண்டியாறு, புன்னம்புழா, மேல் தாமிரபரணி, சுருளியாறு, பரலியாறு ஆகிய நீர்மின் திட்டங்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, செயல்படுத்தக் கூடிய நிலையை காமராஜ் அரசு ஏற்படுத்தியது.

இந்த வகையில் தமிழ் நாட்டில் நிறுவப்பட்ட மின் திட்டங்கள் மூலமாக, மின்சக்தி திறன் 1963 ஏப்ரல் 1-ஆம் தேதியன்று 6,30,700 கிலோவாட்டாக உயர்ந்தது. காமராஜ் பொறுப்பேற்ற போது 156 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, 571 மெகாவாட்டாக உயர்ந்தது.

------------------------------
பால்: பொருட்பால்

அதிகாரம்: குடி செயல் வகை (103)

குறள்:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

பொருள்:
என் குடியையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு முன்வந்து நிற்கும்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
 
வாங்க பெருவிஜயன், வருகைக்கு நன்றி.... தொடர்ந்து வாங்க.
 
good work.keep it up
 
நண்பரே!

அருமையான பதிவாக செல்கிறது, நிறைய தகவல்கள் கொடுக்கிறீங்க.

நாட்டுக்காக உழைத்த தலைவன் எங்கே, ஓட்டுக்காக இலவசங்களை அறிவிக்கும் அறிவில்லாத தலைவர்கள், கர்ம வீரரின் கால் தூசிக்கு கூட இணையாக மாட்டாங்க.
 
pls inform me how to vote for this article
 
Post a Comment<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?