Sunday, April 23, 2006
காமராஜ் - 101 [ # 35 ]
காமராஜ் அரசு செயல்படுத்திய பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை முன்பு பார்த்தோம்.
குறிப்பாக பெரியாறு மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம் முதலிய அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்களை நிறைவேற்றி முடித்ததனால், காமராஜ் அரசு கிராமப்புறங்களை விரைந்து மின்மயமாக்க முடிந்தது.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கிராமப்புற மின்மயமாக்குதலில் தமிழ்நாடு மிகப் பெரிய சாதனை செய்திருந்தது. 1963-ம் ஆண்டு இந்தியா முழுவதும் மின்மயமாக்கப்பட்ட 5000 மக்கள் தொகை கொண்ட கிராமங்கள், நகரங்களின் மொத்த எண்ணிக்கை 32,500. இதில் தமிழகத்தில் மட்டும் இந்த 5000 மக்கள்தொக அடிப்படையில் 657 நகரங்களும் 6777 கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்களின் 1963 மார்ச் எண்ணிக்கை கீழ்வருமாறு:
( *** Please scroll down couple of pages, the content continues after it. *** )
மேலும் இதே எண்ணிக்கை இரண்டாம் ஐந்தாண்டு திட்ட கால முடிவில், 1966 வாக்கில் 22,103 கிராமங்கள் மின் இணைப்பை அனுபவித்தன. இதில் குறிப்பிடத்தக்கது, முதல் ஐந்தாண்டு திட்டம் தொடங்கிய காலத்தில், 813 கிராமங்கள் மட்டுமே மின் இணைப்பை பெற்றிருந்தன. இவ்வளவு வீரியமான கிராமிய மின்மயமாக்கலுக்கு காரணம் இத்துறையில் காமராஜ் அரசின் சீரிய செயல்பாடே. இந்த கிராமிய மின் இணைப்பு, கிணற்று மற்றும் பம்பு செட்டு பாசன பெருக்கத்திற்க்கு பெரு துணையாக அமைந்தது.
------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: வினைதிட்பம் (67)
குறள்:
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
பொருள்:
செயல்திறம் பற்றி சொல்லுதல் எல்லோருக்கும் எளிது. சொல்லியபடி செய்து முடிப்பது அரியதாம்.
------------------------------
- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

மாநிலங்கள் | நகரங்கள் | கிராமங்கள் |
---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | 392 | 2712 |
அஸ்ஸாம் | 20 | 72 |
பீகார் | 186 | 2244 |
குஜராத் | 182 | 954 |
கேரளா | 467 | 1316 |
மத்திய பிரதேசம் | 129 | 477 |
சென்னை | 657 | 6777 |
மகாராஷ்ரா | 259 | 1352 |
மைசூர்(கர்நாடகா) | 192 | 2889 |
ஒரிசா | 38 | 177 |
பஞ்சாப் | 199 | 4225 |
ராஜஸ்தான் | 113 | 145 |
உத்திரப்பிரதேசம் | 300 | 4388 |
மேற்கு வங்காளம் | 124 | 382 |