Tuesday, June 13, 2006
காமராஜ் - 101 [ # 42 ]
அது ரேசன் காலம், ஒரு சிற்றூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அந்த ஊரில் உள்ள முக்கியப் புள்ளி ஒருவர் வீட்டுக்கு சென்றுவிட்டு, அவரது உபசரிப்பை காமராஜ் ஏற்றார். அதன் பிறகு, எட்டரை மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்குதான் எரிந்தது; மைக் கூட கிடையாது. நல்ல இருட்டு, காமராஜ் பேச தொடங்கியதும், ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் எழுந்தது. பெரிய புள்ளியின் வீட்டு உபசரிப்பை காமராஜ் ஏற்றதற்கு கண்டனக் குரல் அது. "கருப்பு சந்தை ஒழிக" என்று அந்த குரல் ஒழித்தது. காமராஜ் பேச்சை நிறுத்தினார். கூட்டத்தின் மூலையில் இருந்த உருவத்தைப் பார்த்து "உனக்கு எவ்வளவு நாளா என்னைத் தெரியும்?" என்று கேட்டார். "முப்பது வருசமா" என்று பதில் வந்தது. " அப்புறம் என்னாண்ணேன்? உட்காரு" என்றார். காமராஜ் சொன்னபடி அந்த உருவமும் உட்கார்ந்தது. பிறகு காமராஜ் பேசினார். கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் குரலெழுப்பிய நபருக்கு காமராஜ் ஒரு பதிலும் சொல்லவில்லை.
சென்னை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, காமராஜை ஒருவர் கேட்டார் " நீங்கள் வந்து...". "கூட்டத்தில் சத்தம் போட்ட ஆளுக்கு பதில் சொல்லலேயே என்று கேட்கிறீங்களா? ஆமாம், அந்த ஆள் சத்தம் போட்டது நியாயம்தானே!" என்ற காமராஜ் விவ்ரமாக் சொன்னார்.
"அந்த ஆள் ஒரு தியாகி. சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர். எனக்கு 30 வருஷமாக தெரியும். நம்மை இந்த ஊரில் வரவேற்ற பெரிய புள்ளி, நெல்லை ஒழுங்கா ரேஷனுக்கு கொடுப்பதில்லை. அந்த ஆளுக்கும் இந்த தியாகிக்கும் ஆகாது. இந்த தியாகியை விலைக்கு வாங்க அந்தப் புள்ளியால் முடியவில்லை; முடியாது! இந்த தியாகி ஏதோ கடை வைத்துக்கொண்டு இருக்கிறார்.'அப்புறம் ஏன் அந்தப் பெரிய புள்ளியின் வரவேற்பை நாம ஏற்றுக்கொள்ளணும்னு' கேட்கிறீங்களா? நாம இங்கே வர்றோம்ணு இந்தத் தியாகிக்கு தெரிஞ்சா, கடன் வாங்கியாவது செலவு செய்வார். அப்போ அந்த பெரிய புள்ளியிகிட்ட போய்த்தான் கடன் வாங்குவார். இந்த தியாகி கடன்பட்டுத் தவிக்கிறதை நான் விரும்பலே! அதே நேரத்தில இவரோட தொண்டுக்கு நான் என்னைக்கும் மதிப்பு தர்றவன்! அது தியாகிக்கே தெரியும். இன்னும் மூனு நாள்ள, அங்கே நம்மை வந்து பார்பார், பாருங்க" என்று சொல்லி பேச்சை முடித்தார்.
காமராஜ் சொன்னபடியே மூன்றாவது நாள், காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு அந்தா தியாகி வந்துவிட்டார். காமராஜ், தியாகிகளை மதிக்கும் பண்பு நலம் உள்ளவர்;
------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: பழைமை (81)
குறள்:
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்றுஅதற்கு
உப்புஆதல் சான்றோர் கடன்.
குறள்:
நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.
------------------------------
- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
ரொம்ப நாளாச்சு உங்க பதிவை படிச்சு.
கர்மவீரரின் மதிநுட்பத்தை கண்டு வியக்கிறேன். எத்தனை அருமையான தலைவர்.

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஐயா அவர்களுக்கு இளங்குமரனின் வணக்கம். அருமையான தகவல்கள். அனைவருக்கும் போய்ச் சேரவேண்டிய தகவல்கள். தொடருங்கள். உங்கள் பதிவினை எனது மாணவர்களுக்குப் பயன்படுத்த தங்கள் அனுமதி தேவை.
நன்றி
http://aaivuthamizh.blogspot.com/2006/03/blog-post.html

வாங்க முனைவர் ஐயா, முதல் முறையாக வந்து படித்து, பின்னூட்டமிட்டதற்க்கு நன்றி. உங்கள் மாணவர்களின் உபயோகத்திற்க்கு இப்பதிவு பயன்படுவது மிக்க சந்தோசமே, மற்றபடி எனது அனுமதி என்று ஒன்றும் தேவையில்லை, நிறைய பேரை சென்றடையும் குறிக்கொளே இப்பதிவு. நான் வயதில் மிக சிறியவன், ஐயா என்று என்னை அழைக்காமல், உங்கள் மாணவர்களை அழைக்கும் சொற்றொடரிலே என்னையும் அழைக்கலாம், அல்லது தம்பி எனலாம் - மிகவும் சந்தொசமைடைவேன்.
Post a Comment
<< Home