Thursday, June 22, 2006

--------

காமராஜ் - 101 [ # 46 ]

பாகல்மேடு மாநாடு...
மக்களாட்சி வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக 1957-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பாகல்மேடு மாநாட்டை கூறலாம். சமுதாய வளர்ச்சித்துறையை தன்னிடம் எடுத்துக்கொண்ட பின்னர், காமராஜிடம் எழுந்த எண்ணம்தான் பாகல்மேடு மாநாடு.

மக்களுக்கும் அரசுக்கும் எல்லா மட்டத்திலும் தொடர்பு இருக்க வேண்டுமென விருப்பிய காமராஜ், மக்களின் பங்களிப்பு இல்லாமல் சமுதாய மேம்பாடு இருந்திட முடியாது எனக் கருதினார். அது போல, அரசு அதிகாரிகள் மக்களோடு ஒன்றினைந்து, எல்லா வகையிலும் மக்களுக்கு உதவி புரிய இருப்பதைக் காட்டிக்கொள்ளவில்லை என்றால், மக்களின் பங்களிப்பை முழுமையாக எதிர்பார்க்க முடியாது என்பதையும் காம்ராஜ் உணர்ந்திருந்தார். சிகப்பு நாடா முறைகள் ஒழிக்கப்பட வேண்டும் அதிலும் குறிப்பாக சமுதாய மேம்பாடு திட்ட செயல்பாடுகளில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட காமராஜ் விரும்பினார்.

எனவே, ஆட்சியாளர்களும் மக்களும் ஒரே இடத்தில் கூடி, கலந்துரையாடி, பிரச்சனைகளுக்கு அதே இடத்தில் தீர்வு காணப்பட்டால்தான் விருப்புகிற, எதிர்பார்க்கிற வகையில் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் நடந்தேற வாய்ப்புண்டு என காமராஜ் கருதினார். அந்த வகையில் ஏற்பாடு செய்ய்பட்டதுதான் செங்கள்பட்டு மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதி, பாகல்மேடு பிர்கா மாநாடு. பிர்கா என்பது கிராம பஞ்ச்சாயத்திற்கும் மாவாட்ட பஞ்சாயத்திற்கும் இடைபட்ட ஐந்தாறு கிராமங்களை உள்ளடக்கிய 1958ம் ஆண்டு பஞ்சாயத்து சட்டத்திற்கு முன்பு செயல்ப்ட்டு வந்தது.

பாகல்மேடு பிர்கா கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் இந்த மாநாட்டிற்க்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழக் முதல்வர் காமராஜ் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், பொது மக்களால் முன் வைக்கபடும் சமுதாய மேம்பாட்டுப் பிரச்சனைகளுக்கு உடனடியாக அங்கேயே தீர்வு காணப்படுமெனவும் அறிவிக்கபட்டிருந்தது.

முதல்வர் காமராஜ், தலைமைச் செயளர், சமுதாய மேம்பாட்டுத்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சி தலைவர், கீழ்நிலை அதிகாரிகள் உடன் பாகல்மேடு மற்றும் பிர்கா கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக, அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் கண்காட்சியைத் தமிழக முதல்வர் காமராஜ் திறந்து வைத்தார்.

மாநாட்டின் அடிப்படையை முதல்வர் காமராஜ் முதலில் விளக்கினார். நேரிடையாக மக்கள் பிரச்சனைகளை அறிந்து, இயன்றவரை உடனடி தீர்வு காண தான் வந்திருப்பதாகவும் கூறிய காமராஜ், அரசு மீதான மக்கள் நம்பிக்கையை எற்படுத்தவும் தன்னுடைய அரசு மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு என்பதை மக்கள் உணர்ந்திட வேண்டுமெனவும் கூறினார். சுற்றுபுற கிராமத்தில் உள்ளவர்கள் ஒன்றுகூடி சமுதாய தேவைகளைக் குறித்து கலந்துரையாடுவதன் மூலமாக, சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை எல்ல கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியுமென்றும் காமராஜ் கூறினார்.

மேலும், குழுமியிருந்த அரசு அதிகாரிகளைப் பார்த்து, மக்களுடைய நம்பிக்கையைப் பெறுவதுதான் அவர்களுடைய முதன்மையான பணியாக இருந்திட வேண்டும், அப்படி நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றி அடைவதன் மூலமே மிகப்பெரிய செயல்களை எளிமையாக் அதிகாரிகளால் நிறைவேற்ற இயலும் என்பதையும் காமராஜ் எடுத்துரைத்தார்.

அதன்பின்னர், பிரச்சனகளைப் பற்றி பேச பொதுமக்கள் அழைக்கப்பட்டனர். தங்கள் கிராமத்தில் ஒருவர் கூட படித்தவர் இல்லையென்றும், தங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்றும் ஒரு கிராமவாசி கூறி, தங்கள் கிராமத்தை சேர்ந்த 36 பேர்களுடைய பெருவிரல் ரேகை இட்ட மனுவை காமராஜரிடம் அளித்தார். முழுமையாக அரசு செலவிலேயே தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென்று இன்னொறு கிராமவாசி கூறினார். நெடுந்தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு செல்லும் வழியில், வயல் வெளியில் தங்கள் கிராமத்தை சார்ந்த பெண் குழந்தை பெற்றதாகவும் அதனால் தங்கள் கிராமத்திற்க்கு மருத்துவ மனை வேணுமென்று மற்றொரு கிராமவாசி கூறினார். பக்கத்து ஊர் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற சிறுவன் வெள்ளத்தில் மூழ்கிப் போய்விட்டான் எனக்கூறி, தங்கள் கிராமத்திலேயே பள்ளிக்கூடம் வேண்டுமென்று ஒரு கிராமவாசி கூறினார். கிராம தொழிகளில் தங்களுக்கு பயிற்ச்சி அளிக்கப்பட வேண்டுமென பெண்கள் கோரிக்கை விடுத்தனர். தங்களுடைய குடியிருப்புகளில் குடிநீர் கிணறுகளும் பள்ளிகளும் வேண்டுமென்வும் தங்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட வேண்டுமென்று தாழ்த்தப்பட்டோர் சார்பாக பேசியவர் கோரிக்கை வைத்தார்.

இப்படி இரண்டு பெண்கள் உள்பட ஐம்பது கிராமவாசிகள் தங்கள் குறைகளை முதல்வர் காமரஜரிடம் நேரிடையாக எடுத்துரைத்தனர். அதன் முடிவில், தலைமைச் செயளர், மாவட்ட ஆட்சித்தலைவர் பிற அதிகாரிகளுடன் முதல்வர் காமராஜ் ஆலோசனை மேற்கொண்டார். ஏழு கிராம சாலைகள் அமைக்கவும், ஐந்து கிண்றுகள் தோண்டவும், மூன்று பள்ளிகள் திறக்கவும் அந்த இடத்திலேயே முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள பல திட்டங்கள் முழுமைப் பெற காலக்கெடு வரையறை செய்யப்பட்டது.

மக்களின் மனதில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைத்த இந்த பாகல்மேடு மாநாடு முறையில் மக்கள் குறைகளுக்கு தீர்வு காணுப் முயற்சி தழிழ் நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. பாகல் மேடு பாணி மக்களிடையே பலத்த வரவேற்பை கண்ட திராவிட முன்னேற்ற கழக தலைவர் அண்ணாத்துரை இதற்காக காமராஜ் அரசை பாராட்டியதோடு மட்டுமின்றி, தன்னுடைய தொகுதியிலும் பாகல்மேடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று சட்ட மன்றத்தில் வழியுறுத்தினார்.

எந்த ஜனநாயக நாட்டிலும் மேற்கொள்ளப்படாத புதிய முயற்சியாக் பாகல்மேடு முயற்சியை காமராஜ் அறிமுகப் படுத்தினார். இப்படி, அரசுக்கும் மக்க்ளுக்கும் இடைவெளி இல்லாத நிலையை காமராஜ் மேற்கொண்டதால்தான், அவருடைய அரசு மக்கள் அரசாக விளங்கியது என்பது உறுதி.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: தெரிந்து செயல்வைக (47)

குறள்:
தெரிந்த இனத்தொடு தேர்ந்து, எண்ணிச் செய்வர்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்.

பொருள்:
தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து, திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
அருமையான பதிவு.நன்றி டண்டணக்கா
 
அப்பாடா! பின்னூட்டம் இடுவதற்கு
வழி செய்துவிட்டீர்கள்
நல்ல பதிவு இடைவிடாது தொடருங்கள்
 
வாங்க செல்வன், வருகைக்கு நன்றி.

வாங்க சிவஞானம்ஜி, குழப்றீங்க, நான் ஒன்னுமே மாத்தலியே???
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?