Thursday, April 20, 2006

--------

காமராஜ் - 101 [ # 33 ]

இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் பெரிய அணைகள், நீர் தேக்க ஏரிகள் சார்ந்த பணிகளை செய்தது காமராஜ் அரசு. காமராஜர் ஆட்சியின் ஒன்பது ஆண்டுகளில் பெரிய அணைத் திட்டங்களால் மட்டும் ஏறக்க்குறைய 3,73,436 ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதி பெற்றது.

மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தில் சிறிய நீர் பாசண திட்டங்களை செம்மைபடுத்த தொடங்கியது.

நீர் பாசனத்திற்க்கு பயன்பட்டு வந்த குளங்களை செம்மை படுத்தியது; தூர் வாரி ஆழப்ப்டுத்தியது; சிதைந்த குளங்களை மீட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. வானம் பார்த்த பூமியில் இந்த சிறிய நீர் பாசன திட்டங்கள் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்க்கு பெரிதும் உதவின. இத்திட்டத்தின் கீழ், வடிகால் நீர் கசிவுக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டன.

விவசாயிகளுக்கு கிணறு வெட்ட 25% மானியத்துடன் நீண்ட கால தவணைக் கடன் வழங்கப்பட்டது. பாசனத்திற்க்கு பயன்படும் ஆயில் என்ஞின்களும், மின் பம்பு செட்டுகளும் தவணை முறைக் கடனில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. காமராஜின் ஆட்சியில் தமிழ் நாட்டின் நிலப்பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட 150 லட்சம் ஏக்கரில், 56 லட்சம் ஏக்கர் நிரந்தர நீர்பாசண வசதியை பெற்றது. இதன் மூலம், தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.

சென்னை மாநிலத்தின் பல கிராமங்கள், நீர்ப்பாசனத்திற்க்கு பயன்படும் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பை பெற்றன. காமராஜ் ஆட்சி காலத்தில் தொடங்கிய மின் பம்ப் செட் இணைப்புகள், முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் 14,626 ஆகவும், இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் 75,193 ஆகவும், மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில், 1966-ல் 2,60,000 ஆகவும் அதிகரித்தன. இதனால் கிணற்றுப் பாசன வசதி பெருகி, காமராஜ் பதவி விலகிய 1963-ம் ஆண்டிலேயே, விவசாய உற்பத்தி அதிகரித்துச் சென்னை மாநிலம் "மிகு தானிய உற்பத்தி நிலையை" கண்டது.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: குடி செயல் வகை (103)

குறள்:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையில் பீடுஉடையது இல்.

பொருள்:
தன் குடியை உயர்த்தும் கடமை செய்வதில் கை சோர மாட்டேன் எனும் பெருமையே மிக உயர்ந்ததாகும்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
pls inform how to vote for this article
 
There is a "Thumbs Up" and Thumbs Down" symbol just at the top of this article under 'Kamaraj101[#33]
Click on the 'Thumbs UP" sign if you feel this is nice!
 
வாங்க சிவஞானம்ஜி மற்றும் எஸ்.கே, வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க...
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?