Friday, March 24, 2006

--------

காமராஜ் - 101 [ # 30 ]

இன்னொரு நிகழ்ச்சி, அப்போது காமராஜ் முதலமைச்சராக இருந்தார். நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருந்த அவர், சிவகிரி பயணியர் விடுதியில் தங்கி இருந்தார். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த காமராஜ், ஒரு காட்சியைக் கண்டார். " போய்யா... பொழுது விடிய நேரமில்லை. இப்பவே வந்துட்டீங்க தொந்தரவு கொடுக்க... அய்யா இன்னும் எழுந்திருக்கல. அப்புறமா வாங்க..." என்று உறத்த குரலில் போலீஸ்காரர் ஒருவர் கெடுபிடி செய்து கொண்டிருந்தார்.

விரட்டப்பட்ட அந்த நபரோ, " அய்யா... தயவு செய்யுங்க. நான் எந்த தொந்தரவும் செய்யமாட்டேன். இங்கணக்குள்ள் ஒரு ஓரமா நின்னுக்கிட்டிருக்கேன். தலைவர் வெளியே வரும் போது..." என்று கூறிக் கொண்டிருந்த போதே, அவரை மேலும் பேச விடாமல் போலீஸ்காரர் மறுபடியும் விரட்டினார். இதனைக் கண்ட காமராஜ், விரட்டப்படும் மனிதரின் முகத்தை உற்று கவனித்தார். திடீரென்று காமராஜின் முகத்தில் மலர்ச்சி. " இந்தாப்பா... அவரை ஏன் விரட்டுர... விடப்பா அவரை" என்ற காமராஜின் குரல் கேட்டு, போலீஸ்காரர் குரல் வந்த திசை நோக்கினார். அதற்குள் காமராஜரே அங்கு வந்துவிட்டார். " வேலு நல்லா இருக்கியா? வா... வா... உள்ளே போகலாம்" என்று கூறியபடியே, விரட்டப்பட்டவரின் தோளில் கையைப் போட்டு அழைத்துச் சென்றார். வேலுவின் உள்ளத்தில் திகைப்பும், மகிழ்ச்சியும் போட்டியிட்டன. எதிர்பாரத இந்த வரவேற்பு அவரை திக்கு முக்காட செய்துவிட்டது.

தன்னை காமராஜ் நினைவு வைத்திருந்தது, பார்த்தவுடன் " வேலு, வா வா" என்று அன்பு பொங்கிட அழைத்தது ஆகியவற்றால் தன்னை மற்ந்துவிட்ட அவர், காமராஜருடன் காப்பி அருந்தினார். கடந்த காலம் பற்றிய நினைவுகளை பரிமாரிக் கொண்டனர். ஆனால் காமராஜை சந்திக்க அந்த அதிகாலை நேரத்தில் எதற்காக வந்தாரோ, அந்த விஷயத்தைக் கூறவே மறந்துவிட்டார்.

காமராஜரோடு சுதந்திர போராட்ட காலத்தில் ஒரே கொட்டடியில் சிறை வாசம் அனுபவித்த உத்தம தேசத் தொண்டர் வேலு. காமரஜின் உபசரிப்பிலும், அன்பிலும் திளைத்த அவர், " அப்ப நான் போய் வர்ரேனுங்க " என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு விடை பெற்றார். காமராஜரும், காலையில் எந்த கேட் அருகே போலீஸ்காரர் விரட்டி அடித்தாரோ, அந்த கேட் வரை வந்து வழியனுப்பினார்.

கேட்க வந்த விஷயத்தை வேலு மறந்துவிட்டார். கேட்காமலேயே ஊருக்குப் போய்விட்டார். வேலுவின் ஊரிலிருந்து தன்னை சந்திக்க வந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வேலுவி குடும்ப நிலைமை, ஏழ்மையில் அவர்கள் குடும்பம் படும் கஷ்டங்கள் எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டார் காமராஜ். வேலு தம்மை சந்திக்க வந்த காரணத்தை தானே விசாரித்து புரிந்து கொண்டார். பிறகு சில நாட்களுக்குள்ளேயே, சின்னஞ்சிறு நிவாரணம் வேலுவின் வீடு தேடி சென்றது. மேலும் காமராஜ் முயற்சியில் ஒரு நல்ல இடத்தில் வேலுவுக்கும் வேலை கிடைத்தது. அதன் மூலம் ஒரு தொகை அவர் குடும்பத்துக்கும் கிடைக்க வழி பிறந்தது. வேலுவின் குடும்பத்தில் அதன் பிறகு துன்பம் இல்லை.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: பழைமை(81)

குறள்:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

பொருள்:
பழைய நட்பை மறவாது பொற்றுபவர், பகைவராலும் விருப்பப்படுவார்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
குசேலர்-கிருஷ்ணன் கதைதான் நினைவுக்கு வந்தது, இதைப் படித்ததும்!
வம்புகள் நிறைந்த 'வலையூரிலே' ஆறுதல் அளிக்கும் ஒரே பதிவு உஙள் பதிவுதான் என்றால் மிகையாகாது!
தொடரட்டும் உங்கள் பணி!
 
வாங்க SK, வருகைக்கு நன்றி. I have to strongly disagree with you, personely i admire a lot of blogs here.
 
மிக நல்ல பதிவுகள்.. தொடருங்கள், ஒரு புத்தகம் படிப்பது போல் உள்ளது.

இந்த தேர்தல் சமயத்தில் இதைப் படிக்கும்போது, ஏக்கப் பெருமூச்சுத் தான் வருகிறது.

வாழ்த்துக்கள்
சுகா
 
ஸ்டார் போடுவதற்கு பட்டையையே காணவில்லையே..
 
டண்டணக்கா!! நல்ல பதிவுகள்!! மீண்டும் வரேன்..
 
அருமையான சம்பவம்.

பழைய நண்பர்களை மறக்காமல் பெயர் சொல்லி அழைப்பது ஒரு அரிய கலை.

அப்படி அழைக்கும் போது அந்த நண்பர்கள் அடையும் மகிழ்ச்சியே தனி தான்.

நான் பலமுறை இதை அனுபவித்திருக்கிறேன், முடிந்த வரை அனைவரையும் நினைவில் வைக்கவும் முயல்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்க நண்பரே!.

எஸ்.கே அவர்கள் சொன்னது மிகச் சரி தான். இப்பதிவு உண்மையில் அருமையான பதிவு.
 
வாங்க சிவம், சுகா, சரவ், பரஞ்சோதி...அனைவருக்கு நன்றி.

appologies for not replying the comments for a while. happy to see some more new people started reading.
please keep coming here to read, more articles on to come.
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?