Wednesday, March 15, 2006

--------

காமராஜ் - 101 [ # 21 ]

காமராஜர் இல்லம், காலை நேரம். ஒரு சிறுவனும் சிறுமியும் காமராஜரின் வீட்டுகுள் நுழைய முயல்வதும் ஊழியர் ஒருவர் அவர்களை "உள்ளே வரக்கூடாது" என விரட்டுவதுமாக இருந்தார். குழந்தைகள் இருவரும் நம்பிக்கை இழந்து தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அப்போது எதற்காகவோ வெளியே வந்த காமராஜ், ஊழியர் இரு குழந்தைகளை கைகளை ஓங்கி அடிப்பதுபோல் மிரட்டி விரட்டிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டார். உடனே குழந்தைகளை அழைத்தார். " என்ன? ...யாரை பார்க்க வந்தீங்க?" என்று அன்புடன் விசாரித்தார். குழந்தைகள் " எங்க அண்ணாவுக்குப் பரிட்சைக்குப் பணம் கட்ட அம்மாவுக்கு வசதியில்லே. உங்களை பார்தா... ." என்று சிறுமி சொல்லி முடிக்குமுன்னே குறுக்கிட்ட காமராஜ், சிறுமியின் தொள்களில் தட்டிக்கொடுத்தபடியே " அம்மாதான் அனுப்பி விட்டாரா?" என கேட்டார்.

" இல்லை, நாங்களாகவேதான் வந்தோம். அம்மா, தினம் அப்பளம் போட்டு, வீடு வீடாகக் கொண்டுபோய் வித்துட்டு வருவாங்க. அதில வர்ற வருமானத்தை வைச்சுதான் எங்களை படிக்க வைக்கிறாங்க". காமராஜருக்கு இதற்க்கு மேலும் அந்தக் குழந்தைகளின் குடும்பம் படும்பாட்டைக் கேட்க மனம் பொறுக்கவில்லை. சில காலமாக, காமராஜரால் மடிப்படிகளில் ஏறி இறங்க முடியவில்லை. அதனால், வீட்டின் முன் பகுதியிலுள்ள ஓர் அறையிலேயே அமர்ந்து, தேடி வருபவர்களிடம் பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். எனினும், தம்மிடம் உதவி கேட்டு வந்திருந்த இந்த இரு பெரிய மனிதர்களுக்காக மாடிப் படியேறினார். இறங்கி வரும் போது அவரது கையில் ஒரு புத்தம் புதிய கவர் இருந்தது. அந்த கவரில் சில பத்து ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. குழந்தைகளை அழைத்து, சிறுமியின் கையில் கவரைக் கொடுத்த காமராஜ் " அண்ணாவுக்கு பரிட்சைக்கு பணம் கட்ட இதை வச்சுக்கோங்க, அம்மா பேச்சை கேட்டு படிச்சு, நல்ல புள்ளைங்களா நடக்கணும்... தெரியுதா..?" என்று அன்புடன் சொன்னவர், அவர்களை முதிகில் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

மறுநாள், அதே குழந்தைகள் காமராஜரை தேடி வந்தனர். " அய்யா...! பரிட்சைக்கு பணம் கட்டியாச்சுங்க. இந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க" என்றபோது, காமராஜ் மனம் நெகிழ்ந்து போனார். அந்தக் குழந்தைகள் காமராஜரின் கால்களில் விழுந்து நமஸ்காரம் சொன்னபோது, அவருக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம், நெகிழ்ச்சி மற்றொரு பக்கம்.

அருகிலிருந்த நவசக்தி நிருபர் அம்பியிடம் " ஏழைக் குழந்தைகள்.. பொய் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்தேன். பொறுப்போடு வந்து ரசீதைக் காட்டி விட்டுப் போகின்றனர்... நல்ல பிள்ளைகள்" என்றார் உள்ளம் நெகிழ்ந்த நிலையில்.

-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: (96) குடிமை

குறள்:
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

பொருள்:
முகமலர்ச்சி, ஏழைகளுக்கு உதவுதல், இனிய சொல்
பேசுதல், பிறரை ஏளனம் செய்யாமை ஆகிய நான்கும்
உயர் குடிப்பண்புகளாகும்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
காமராஜ் திரைப்படத்திலும் இந்தக் காட்சியைப் பார்த்ததாய் நினைவு...
 
எங்க போய்ட்டீங்க டண்டண்! 21 ஆம் பாகமும் ரொம்ப நல்ல சம்பவத்தை சொல்லி இருக்கீங்க. நன்றி
 
மீண்டும் வருக.. தலைவரின் கதையைத் தொடர்க.....
 
வாங்க குமரன், அந்த படம் ஒருமுறை பார்தது, ஞாபகம் இல்லை. அடுத்த தடவ பார்க்கும் போது நோட் பண்ணனும்.

சிவா, மெயில் போட்டேன்...கிடைச்சுச்சா, அது ஒன்னுமில்ல ரெண்டு மாசமா ஒரு பரிசோதனை, அவ்வளவுதான்...

நன்றி தேவ், தொடர்ந்து வாங்க.
 
டண்! பதில் மடல் போட்டிருக்கிறேன். கிடைச்சா பதில் கொடுங்கள்.
 
வாங்க நண்பரே!

மீண்டும் மகத்தான தலைவரின் வாழ்க்கை சம்பவங்களை சொல்லத் தொடங்கியாச்சு.

தேர்தல் சமயத்தில் மக்கள் இதை படிப்பது மிகவும் அவசியம்.
 
Siva, Thanks.
 
வாங்க பரஞ்சோதி, நன்றி. கட்டாயம், தேர்தல் சமயத்தில் வாசிப்பதற்க்கு கூடுதல் சுவைதான். மேலும் இன்று எவ்வாறு தலைமையின் இலக்கணம் திரிக்கப்படுகிறது என்றும், தலைவன்/தலைவி என இன்று அழைக்கபடுபவர்கள், அவ்வறு அழைக்கப்பட என்ன தகுதி கொண்டுள்ளாரகள் என ஒப்பிட்டு அறிய நிச்சயம் உதவும்.
 
Very good Blog. Keep up good work.
 
Very good Blog. Keep it up.
 
Thanks Sivabala, please visit again.
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?