Wednesday, July 05, 2006

--------

காமராஜ் - 101 [ # 53 ]

காமராஜ் ஆட்சி பொறுப்பை ஏற்ற நேரத்தில் வட சென்னையில் விருதுநகர் நாடார் உறவின் முறை சங்கம் செயல்பட்டு வந்தது. அந்த சங்கத்தில் மகமை நிதியாக கொஞ்சம் தொகையும் இருந்தது. அந்த மகமை நிதியிலிருந்து ஏதாவது ஒரு உயர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும் என அச் சங்கக்ம் முடிவு செய்து, ஓர் உயர் நிலை பள்ளி துவங்க திட்டமிட்டு, அதற்கான் அனுமதி வேண்டி பொதுக்கல்வி இயக்குனருக்கு விண்ணப்பம் செய்தார்கள். உயர் நிலை பள்ளி துவங்குவதற்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. தேவையான இடம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம் இப்படி சில. இப்படிப்பட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் சங்கமும் உயர் நிலை பள்ளி தொடங்க அனுமதி கேட்டது. பொது கல்வி இயக்ககமும் அனுமதி குறித்த எந்த பதிலையும் அளிக்காமல் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில் முதல்வர் காமராஜிடம் சென்று சங்க பொறுப்பாளர்கள் முறையிட்டனர். பொது கல்வி இயக்குனரோடு காமராஜ் தொடர்பு கொண்டு, இது பற்றி பேசுவதற்க்கு சம்பந்தபட்ட துணை இயக்குனரை அனுப்பு வைக்குமாறு கேட்டுக் கொண்டார். தானே வருவதாக இயக்குனர் தெரிவிக்க, இந்த அனுமதி குறித்து என்ன முடிவு எடுத்துள்ளீகள் என் தெரிந்தௌ கொள்ள மட்டுமே வேண்டும், எனவே இந்த சிறிய தகவலுக்காக இயக்குனர் வர வேண்டியதில்லை, துணை இயக்குனரை அனுப்பி வைத்தால் போதும் என்று காமராஜ் கூறிவிட்டார்.

குறிபிட்ட நாளில் துணை இயக்குனராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு தலைமை செயலகம் சென்று காமராஜரை சந்தித்தார். முதலில் விதிமுறைகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்ட காமராஜ், சங்கத்தினர் விதிமுறைகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி விட்டார்கள், எவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டார். முதலமைச்சர் காமராஜர் விரும்புகிறபடி ஆணையிடுவதாக இயக்குனர் கூற சொன்னதாக் நெ.து.சுந்தர வடிவேலு பதிலளித்தார்.

உடனே, "இத்தகையவற்றை நான் விரும்புகிறேனா இல்லையா என்று பாராமல், விதிமுறைகளின் அடிப்படையில் முடிவு செய்வதே நிர்வாகதிற்கு நல்லது. உயர்நிலைப் பள்ளிக்கு, என்று, பொருத்தமான தனிக்கட்டிடம் இல்லாத நிலையில் சாதாரணமாகா என்ன அனுமதி கொடுப்பீர்கள்?" என்று காமராஜ் கேட்டார். பதிலுக்கு சுந்தர வடிவேலுவும் "புதிய கட்டடம் கட்டுவதை எதிர்பார்த்து முதல் மூன்று படிவங்களை தற்காலிகமாக அனுமதிப்போம், கட்டட வேலை முடிந்த பிறகு ஒன்பது, பத்து, பதினோறாவது வகுப்புகளை அனுபதிப்போம்" என்றார்.

காமராஜரும் அதை ஆமோதிக்கும் விதமாக, "சரியான போக்கே, வாக்குறிதியை நம்பி மட்டும் எடுத்த எடுப்பிலேயே, கேட்டதை எல்லாம் கொடுத்து விட்டால், அப்புறம் செயற்குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்த தொழிலை கவனிக்க போய்விடக்கூடும். அடியோடு அனுமதி மறுத்தால், ஊரார் மகமைப் பணத்தை செலவிட முடியாது. இதுவரை பின்பற்றும் நடைமுறை இனியும் தொடரலாம்" என்று ஆணையிட்டார். சுந்தரவடிவேலுவோ பணிவான குரலில்...
"தாங்கள் விருப்பினால் அவரகள் கேட்டுள்ள முதல் நான்கு படிவங்களையும் கொடுப்பதாக, இயக்குனர் என்னிடம் கூறி அனுப்பினார்" என்றார். ஆனால் காமராஜ் உறுதியோடு, "இந்த பள்ளிகூடம் தொடங்க போகிறவர்கள் எனக்கு வேண்டிய்வரகள்தான். அவரகள், அரசின் விதிமுறைக்கு கட்டுபட்டல்தான் மற்றவர்களை கட்டுபடுத்த முடியும், மூன்று படிவங்கள் கொடுத்தாலே போது என்று இயக்குனரிடம் சொல்லுங்கள்" என்பதோடு முடித்துக் கொண்டார்.

விதிமுறைகள் யாருக்காகவும் தளர்த்தப்படக்கூடாது, அப்படி நல்ல செயல்களுக்காக தளர்த்தப்பட்டாலும் கூட அது பொதுவாக அனைவருக்கும் பொருந்தக் கூடிய வகையிலே இருக்க வேண்டும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணிபுரியக் கூடியவர்கள் வளைந்து கொடுக்க விருபினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அப்படி ஏற்றுக் கொண்டால் பொதுவான தன்மை இல்லாமல் போய்விடும் என்பதையும்தான் காமராஜருடைய உறுதியான மனப்போக்கு வெளிப்படுத்துகிறது.

------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: நடுவு நிலைமை (12)

குறள்:
தகுதி எனஒன்று நன்றே, பகுதியால்
பால்பட்டு ஒழுகப் பெறின்.

பொருள்:
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்ப்டும் ஓர் அறம் மட்டுமே போதும்.

------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Tuesday, July 04, 2006

--------

காமராஜ் - 101 [ # 52 ]

காமராஜ் முதலமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில், ஒருபுறம் பஞ்சத்தின் கொடுமை, பசி பட்டினி அவலங்கள், மற்றொருபுறம் கல்வியின்மையும், வேலையில்லா திண்டாட்டமும் தாண்டவமாடியது. எனவே பசியற்ற நிலையை உருவாக்குவதே நமது நோக்கம் என்றார்.

"நம்முடைய நோக்கம் என்ன? யாரும் இந்த நாட்டிலே சாப்பாட்டுக்கு இல்லையே என்று இருக்க கூடாது. இது நியாயம்தானே. ஏன் உலகத்திலேயே சாப்பாட்டுக்கு இல்லையே என்று யாரும் இருக்க கூடாது. நம்முடைய நாடு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டாமா? இதை மாற்ற வேண்டியது நம்முடைய அடிப்படையான தேவையல்லவா?"

சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதுதான் தம்முடைய ஆட்சியின் கொள்கை என்பதை தனக்கே உரிய முறையில் காமராஜ் கீழ்கண்டவாறு கூறினார்.

"நான் வரும்போது கிராமத்தில் ஒரு பையன் குச்சியை வைத்துக் கொண்டு மாடு மேய்க்க போய்க் கொண்டிருந்தான். நான் கேட்டேன், ஏண்டா பள்ளிக்கூடம் பள்ளிக்கூடம் போகவில்லையென்று. கஞ்சித் தண்ணிக்கே வழியில்லை என்கிறான். அவனுக்கு சாப்பாடு இருந்தால், அவன் பள்ளிக்கூடம் போட மாட்டானா என்ன? அவன் அப்பன், அம்மாவுக்கு தன் பையனை பள்ளிகூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசையிருக்காதா என்ன?. நான் கேட்டேன், சம்பளம் நீ கொடுக்க வேண்டியதில்லை, மதியானம் சோறு வேறு போடுகிறோம், நீ ஏன் பள்ளிக்கூடத்திற்க்கு போக கூடாதென்று? அவன் சொல்லுகிறான், சட்டை இல்லை. சட்டை வாங்க பணமில்லை என்கிறான். சட்டை போடாமல் போனால் அங்கே சின்னப் பையன்களெல்லாம் கேலி செய்வார்களாம். ஒரு சட்டை வாங்க பணமில்லை அவனுக்குத்தான் பண்மில்லையே என்று அப்படியே விட்டுவிடலாம் இல்லையா? அவனுக்கு ஏதாவது வழி பண்ண வேண்டாமா? இல்லையா? இல்லை அப்படியே விட்டுவிடலாமா?

நீ மாடு மேய்க்கத்தான் பிறந்தாய், உன் தலையெலுத்து அப்படித்தான் இருக்கிறது என்னு சொல்லி விட்டுவிடலாமா? இது எப்படி நியாமென்று கேட்கிறேன். அது அப்படித்தான் என்றால், அவன் பெரியவன் ஆனதும் என்ன சம்பாதித்து விடுவான்? காலமெல்லாம் மாடு மேய்ப்பான் , காட்டுக்கு காவல் போவான், கையிலே கம்பு வைத்துக் கொண்டு உடம்பிலே கொஞ்சம் வழுவிருந்தால் வம்புச் சண்டைக்கு போவான்.

ரோடிலே போகிறவன், வருகிறவன், மண்டையெல்லாம் உடைப்பான், இப்படி மண்டையை உடைத்து மிரட்டியே பணம் சம்பாதிப்பான். அப்படி ஆள் இருக்காங்க சண்டிட்தனம் பண்ணி மிரட்டி சம்பாதிக்கிறது தான் அவர்கள் வேலை. நம்க்கும் இரண்டு ஆள் வேண்டியிருக்கிறதில்லை? அவனை வையவிட? இவனை வையவிட? இப்படியே அவன் வளர்ந்து விடுகிறான். இது ஆபத்து இல்லே? ஊரிலே சண்டித்தனம் பெருத்திட்டா ரொடிலே போக முடியுமா என்ன? தடிக்கம்பை கையில் எடுத்துக்கொண்டு கலகம் பண்ணுவான். இதனாலே சமுதாயம் கெட்டுப்போகிறது.

அது மாதிரி நிலைமைக்கு போக விடாமல் நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டாமா? அவனை தொழில் பண்ண சொல்லி, விவசாயம் பண்ணச் சொல்லி உத்தியோகத்திற்குப் போக சொல்லி, வியாபாரம் பண்ணச் சொல்லி செய்தால் தான் நடக்கும். ' மகாத்மா காந்தி என்ன சொன்னார். இந்த ஏழை மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமென்று சொன்னார். இதற்கான் வழிகளைத் தானே நாங்கள் செய்கிறோம்."

இந்த கூற்றிலிருந்தே காமராஜரின் தூய எண்ணங்கள், செயல்பட்டுகள் நமக்கு எளிதில் விளங்குகிறது.

------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: செங்கோன்மை (55)

குறள்:
வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

பொருள்:
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிபார்த்தே வாழ்வர்.
------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?