Wednesday, April 19, 2006
காமராஜ் - 101 [ # 31 ]
நீலகிரி மலை மீது திட்டமிடப்பட்ட குந்தா மின் திட்டம் நிறைவேற்ற முப்பது கோடி தேவைப்பட்டது. ஆனாலும் நிதியமைச்சர் திரு சி.எஸ் மலைக்கவில்லை. முதல்வர் ராஜாஜியின் அனுமதியோடு மத்திய அரசின் நிதி அமைச்சர் திரு. தேஷ்முக்கின் உதவியை நாடினார்.
கிழக்காசிய நாடுகளின் முன்னேற்றத்திற்க்கு செல்வந்த நாடுகள் மானியங்கள் தந்து உதவ வேண்டுமென்ற கொளும்பு திட்ட அடிப்படையில் கனடா நாட்டின் உதவியை திரு. தேஷ்முக் பெற்றுத்தந்தார். குந்தா திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் துவங்கிவிட்டன.
ஆனால் நாட்டிலேற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளில் சில மாற்றங்களேற்பட்டன. சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலக காமராஜ் முதல்வரானார். 1956ல் நேரு அரசு எடுத்த அவசர முடிவான பம்பாய் நகரத்தை மராட்டியத்துடன் இணைக்காமல் குஜராத் மாநிலத்துக்கு தருவது என்பதில் மனமொப்பாது திரு. தேஷ்முக் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.
ஆனால் அவரது முயற்சியின் நன்கொடையால் குந்தா திட்டம் நாளும் வளர்ந்து முற்றுப்பெற்றுவிட்டது.
இப்பொது அதை யார் திறந்து வைப்பது என்ற கேள்வி எழுந்தது. நாட்டின் முதல்வர் காமராஜர். திட்டத்துக்கு உதவியவரோ தேஷ்முக். வேறு யாராக இருந்தாலும் அந்த பெருமை தனக்கே கிடைக்க வேண்டும் என்று விருப்புவர்.
ஆனால் காமராஜரோ தேஷ்முக் அவர்கள் பதவியில் இல்லாவிட்டாலும் அவரே திறக்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார். சம்மதிக்க மறுத்த் தேஷ்முக்கையும் திரு.சி.எஸ் மூலம் சம்மதிக்க வைத்துப்பின் 1956 ஆம் ஆண்டு தேஷ்முக் திறந்தார்.
--------------------------------------------------
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: செய்ந்நன்றியறிதல் (11)
குறள்:
தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
பொருள்:
நன்றியறிதலின் பயனை ஆராய்ந்தவர், பிறர் செய்த தினையளவு சிறிய நன்மையையும், பனையளவு பெரிதாகாகக் கருதிப் போற்றுவர்.

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
you have requested to franchise my vote in favour of this article
but i do not know how am i to franchaise my vote
pls inform

சிவஞானம்ஜி,
இந்த இடுகையின் தலைப்புக்கு அருகே தமிழ்மணம் அளித்துள்ள Tool Barயில் உள்ள நட்சத்திரங்கள் இடப்புறமிருக்கும் Thumbs Upஐ ஒரு முறை சொடுக்க வேண்டும் அவ்வளவுதான்.

ரொம்ப நாட்களுக்கு பின்பு மீண்டும் படிக்காத அற்புதமான பதிவுகளை மீண்டும் படித்தேன், மிக்க நன்றி.
கர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை சம்பவங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
Post a Comment