Tuesday, January 03, 2006

--------

காமராஜ் - 101 [ # 15 ]

ஒருமுறை காரிலே பயணம் செய்துகொண்டிருந்த காமராஜ், ஒரு கிராமத்து ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் சிறுவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் காரை நிறுத்த சொன்னார். காரிலிருந்து இறங்கி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களை கூப்பிட்டார். ஆச்சர்யமடைந்த சிறுவர்கள் அவரை சூழ்ந்துக் கொண்டனர். காமராஜ் அவர்களோடு உரையாடத் தொடங்கினார்.

" என்னடா, தம்பிகளா, பள்ளிக்கூடம் போய்ப் படிக்காமல் ஆடு மேய்ச்சுக்கிட்டுக்கிறீங்க... ஏன் பள்ளிகூடம் லீவா?"
" பள்ளிக் கூடமா, அதெல்லாம் எங்க ஊரிலே கெடயாது" சிறுவர்கள் பதில்.
" அப்படியா? சரி ...உங்க ஊரில் பள்ளிக்கூடம் வச்சா, நீங்களெல்லாம் படிப்பீங்களா?"
" பள்ளிக்கூடம் போய்ட்டா எங்களுக்கு சொறு போடறது யாரு? ஆடு மேய்ச்சாலும் ஆட்டுக்கு சொந்தகாரர் சோறு போடுவார்... ஆடு குட்டி போட்டா ஒரு குட்டி ஆடு குடுப்பாறு".
" ஓஹோ ...இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? சரி, பள்ளிக்கூடம் கட்டி ஒரு வேளை சோறு போட்டா படிப்பீங்களா?"
" ஓ... படிப்போமே... எதுக்கும் எங்க அப்பாரை கேட்கனும்"
" சரி சரி ... நான் கேட்டுக்கிறேன், பள்ளிக்கூடம் உங்க ஊருக்கு வந்தா நீங்க எல்லாம் படிக்கப் போங்க!" என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டார்.

எல்லா மக்களையும் படிக்க வைக்க வெறும் பள்ளிக் கூடங்களை கட்டியும் ஆசிரியர்களை நியமித்தால் மட்டும் போதாது, அங்கு படிக்க வருகிறவர்களுக்கு நண்பகளில் உணவும் அளிக்க வேண்டிய நிலையிலேயே கிராமவாசிகள், பட்டணத்து ஏழைகள் நிலை இருக்கிறது என்பதை சிந்தித்தார்.

இதை தொடர்ந்து நடந்த நிர்வாக கூட்டத்தில் இது தொடர்பாட நடந்த நிகழ்வுகளை முந்தைய பதிவின் ஒரு பகுதியில் பார்த்திருப்பீர்கள்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: அமைச்சு (64)

குறள்:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

பொருள்:
நூலறிவால் செய்யும் வகையை அறிந்தாலும், உலகின் இயற்கை நடைமுறையையும் அறிந்து அதனோடு பொருந்தச் செய்ய வேண்டும்.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
//எல்லா மக்களையும் படிக்க வைக்க வெறும் பள்ளிக் கூடங்களை கட்டியும் ஆசிரியர்களை நியமித்தால் மட்டும் போதாது, அங்கு படிக்க வருகிறவர்களுக்கு நண்பகளில் உணவும் அளிக்க வேண்டிய நிலையிலேயே//
இப்படி படித்த படிக்கவைக்கப்பட்ட மாணவர் சீனிவாசனால் தான் தேர்தலில் தோற்கடிக்ப் பட்டார். வளர்த்த கிடா மார்பில் முட்டியது
 
டண்டணக்கா, ஒரு சிறு வேண்டுகோள். நீங்கள் முதலில் காமராஜை பற்றி எழுத தொடங்கிய போது, 'காமராஜ்-101' என்று அயிரக்கணக்கில் வரும் டம்மீஸ் புத்தகம் போன்ற ஒரு தலப்பு வைத்திருந்தீர்கள். இப்போது மாற்றம் நன்றாக உள்ளது. அனால் அந்த 101 சற்றே உறுத்தல்தான். "காமராஜ் - தலைவன் என்றொரு தமிழ் வார்த்தை " என்றிருந்தால் ஆகா எப்படி இருக்கிறது. 101 விட்டுவிடவும். உங்களுக்கு சரியெனப்பட்டால் மாற்றவும். நன்றி.

சுரேஷ்.
 
நான் இந்த காட்சியை 'காமராஜ்' படத்திலும் பார்த்திருக்கிறேன். பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

நான் டண்டணக்காவ மாத்த சொன்னேன் :-)))
சுரேஷ்! உங்க ப்ளாக் பேரையே மாத்த சொல்லறார் :-)). பாருங்க :-))
 
வாங்க என்னார்,,, நீங்கள் கூறியது பற்றியும், மற்றும் காமராஜருக்கு எதிராக கழகங்களால் மக்களின் அறியாமை மீதும், உணர்வுகளின் மீதும் கட்டமைக்கபட்ட நாடக அரசியல் பற்றியும் கட்டாயம் எழுத வேண்டும். அவைகளைப் பற்றி இரண்டாம் அல்லது மூன்றாம் பகுதியில்தான் எழுத முடியுமென நினைக்கிறேன்.

வாங்க சுரேஷ், "காமராஜ் (For Dummies) - தலைவன் என்றொரு தமிழ் வார்த்தை" என்று மாற்றினால் சரியாக வருமா. Just I want to keep the notion that it's a "basic series" rather than a detailed one. If it doesn't sound good, I can get rid off the "101" part. What do you think?


சிவா, சந்துல ....:) , வருகைக்கு நன்றி.
 
101-ஐ விட்டுவிட்டால் போதும். காமராஜ் பெரும்தலவர் என பலருக்கு தெரியும். ஏன் "பெரும்தலைவர்" என்பதைத்தான் உங்கள் ஒவ்வொரு பதிவும் (அதற்கு மேற்கோளாக குறாளும்) கூறுகிரது. தலவனுக்கான இலக்கணத்தில் "basic" "detailed" என பாகுபாடு என்ன உள்ளது?
 
Sureh, Done deal :)
 
வெல்டன் டண்டணக்கா. நன்றி. இது, தலைவனை பற்றி எழுதும் உங்களையும் அவரது சில(!!) குணாதிசயங்கள் தொற்றிக்கொண்டுள்ளதை காட்டுகிரது. அதாவது "நீ என்ன சொல்றது நான் என்ன கேக்றதுன்ன" அகம்பாவமெல்லாம் இல்லாம பிறர் சொல்லும் நல்லதையும் கேட்டு நடக்கும் குணம். உயர்ந்த பண்பு, இன்றைய உலகத்தில் அரிது. வாழ்துக்கள். தொடருங்கள்.

சுரேஷ்
 
சுரேஸ், உங்களுக்கே இது அதிகமா தெரியலையா :::))))
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?