Tuesday, December 20, 2005
காமராஜ் For Dummies
வணக்கம்.
"டண்டணக்கா" வில் எழுதிவந்த "காமராஜ் For Dummies" என்ற எனது தொடர் பதிவை, நண்பர் கோபி(Gopi) -யின் ஆலோசனைப்படி "தினம் ஒரு ஜென் கதை" போல "காமராஜ் 101" என்ற இந்த தனி வலைப் பதிவிற்க்கு மாற்றியுள்ளேன். இனிமுதல் காமராஜ் தொடர் இப்புதிய வலைப் பதிவிலிருந்து தொடரும்.
எனது "அடிப்படை சோம்பேறித்தனத்தாலும்", பள்ளி(அலுவலக) சூழ்நிலை காரணமாகவும் "காமராஜ் 101" தொடர் பதிவை பல/சில வாரங்கள்/மாதங்கள் எழுத தவறிவிட்டேன்.
கடந்த சில நாட்களாக எனது சோம்பலை வெற்றி கொண்டதன் மூலம், இத் தொடரின் முதல் பகுதிக்கு தேவையான பதிவுகளை நெருக்கி தயார் செய்துவிட்டேன், இன்னும் எழுத்துபிழை மற்றும் பார்மெட் வேலைகள் மட்டும் பாக்கி. இதன் மூலம் புது வலைப் பூவில் தொடர்ந்து பல பதிப்புகள் கொடுக்க முடியுமென நினைக்கிறேன் (!!!).
சில வலைப் பதிவுகளில், ஒவ்வொரு பதிப்பையும் PDF கோப்பாக பார்க்கும் வசதிகள் இருப்பதை பார்த்தேன். தெரிந்த நண்பர்கள் செய்முறை கூறினால், உதவியாக இருக்கும்.
இப்படிக்கு,
டண்டணக்கா

Comments:
<< Home
பெருந்தலைவரைப்பற்றி பேசும் நீரும் நல்ல பெருமையடைவீர் நல்லவர்களைப்பற்றி பேசுபவர்களும் நினைப்பவர்களும் மேன்மையடைவர் என்பது முதுமொழி. நன்றி டண்டணக்கா
அன்புள்ள டண்டணக்கா (இது என்னங்க பெயர்!),
காமராஜ் படம் பார்த்து கண்கலங்கியது நினைவுக்கு வந்தது. உங்கள் இந்த முயற்சிக்கு பாராட்டும் நன்றியும்.
//சில வலைப் பதிவுகளில், ஒவ்வொரு பதிப்பையும் PDF கோப்பாக பார்க்கும் வசதிகள் இருப்பதை பார்த்தேன். தெரிந்த நண்பர்கள் செய்முறை கூறினால், உதவியாக இருக்கும்.//
கவலைப்படவேண்டாம், இன்னும் சில நாட்களில் (ஜனவரி 1) இந்த வசதி இன்னும் மேம்படுத்தப்பட்டு, எளிமையாகக் கிடைக்கும். முன்பு சோதனை முறையில் அது அறிவிக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அதைப்பற்றிய நிரல் உதவி/தகவல் பக்கத்தில் எங்கும் சேமிக்கப்படவில்லை.

வாங்க என்னார், காமராஜ் பற்றி பதிவு எழுதும் திருப்தியே எனக்கு போதும், பெருமையெல்லாம் வேணாங்க, ஆபத்தானது. நம்மல ஆளை விடுங்க :)
வாங்க காசி, பெயர்க்காரணமெல்லாம் நம்மகிட்ட இல்லீங்க, தோணிச்சு... வைச்சேன், அவ்வள்வுதான் :)
காமராஜ் படம் எடுத்த தயாரிப்பாளரின் முயற்ச்சி உன்னதமானது, அதற்க்கே அவருக்கு ஆயிரம் பாராட்டுக்கள் சொல்லலாம். அப்படம் பார்த்தபின்பு, பத்தில் ஒரு பங்கே சொல்லபட்டுள்ளது என்ற எண்ணம் எனக்கு தொன்றியது. என்னளவில், காமராஜின் காவியம், ஒரு மருத நாயகம் போல, பிரமாண்டமாய் எடுக்கப்பட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட எண்ணம்.
உங்களின் PDF சேவையா காத்திருக்கிறேன். இது தமிழ் மணத்தின் தனிப்பட்ட சேவையா அல்லது சைட் கவுண்டர் போல் ஒரு பொது டெக்னாலஜி சேவையா?
வாங்க sivagnanamji, வருகைக்கும், உங்கள் நண்பர்களிடம் இப்பதிவின் அறிமுகத்திற்க்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

காமராஜ் படத்தை பற்றி எழுதியுள்ளதால், அதை தாயாரித்த எனது நண்பன் பாலாவை ஞாபகப்படுத்தியது. மும்பையில் மட்டூங்கா பகுதியில் வார இறுதிகளில் நடந்தவாரு விவரித்த காலமும், பல நாட்கள் இதற்கான பணத்தை ஏற்பாடு செய்ய பட்ட கஷ்டங்களும் பல. எடுத்த காரியத்தை எப்பாடு பட்டாவது முடித்தே தீருவது என்ற பாலாவின் அசாதாரண மன உறுதியினாலேயே இந்த படம் கிட்டத்தட்ட 7 வருட முயற்சிக்கு பின்பு வெளி வந்தது. இந்த தயாரிப்பு செலவுக்கு பெருமளவில் உதவி செய்வதாக வாக்கு கொடுத்திருந்த வாழப்பாடியாரின் மறைவு பாலாவும் பேரிடியாக இருந்தது. கிட்டதட்ட கைவிடவேண்டிய நிலமை. தன்னுடைய வித்தியாசமான மார்கெட்டிங் உத்தியாலும் விடாமுயற்சியாலும் ஒரு வழியாக படம் வெளி வந்தது. இசைஞானி மிக குறைந்த செலவில் இப்படத்திறகு இசை அமைத்துக்கொடுத்தார். முதலில் பாடல்கள் இல்லாமல்தான் வெளிவருவதாக இருந்தது. ஆனால் ராஜாதான் தலைவனுக்காக தானே பாட்டெழுதி அதனை சேர்த்தார். அந்த தலைவனுடைய படத்துக்கு செலவழிக்க யாரும் முன்வராதது எந்த அளவுக்கு பெருந்தலவரை மக்கள் ஞாபகம் வைத்துள்ளனர் என்பதை காட்டுகிறது. எனினும், எப்பாடுபட்டாவது இப்படியும் ஒரு தலைவனிருந்தான் என பதிவு செய்த பாலாவின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
பிகு: (பாலா என நான் குறிப்பிடும் பாலாகிருஷ்ணன் "பிதாமகன்" பாலா அல்ல)

சுரேஸ், முடிந்தால் உங்க நண்பர் பாலாவுக்கு என்னுடைய அன்பார்ந்த நன்றியை தெரிவிக்கவும். கட்டாயம், உங்கள் நண்பருக்கு இது ஒரு நிறைவான சாதனைதான். அருகில் இருந்து பார்துள்ளீர்கள், இதை பற்றி நீங்கள் கட்டாயம் விரிவாக ஒரு பதிவெலுத வேண்டும், இது எனது வேண்டுகோள்.
அத் தலைவனாக நடித்த ராபர்டோ எண்ணவோ அவர் கூட சமீபத்தில் மறைந்த்தாக படித்து (இரண்டாவது முறை) கலங்கினேன். (முதல்முறை படம் பார்த்தபோது).
அவரைப் பற்றியும் ஏதாவது சொல்லுங்களேன்.
இந்த படம் வந்த்தே ஒரு பெரிய கதையாக இருக்கும் போல இருக்கே!
நன்றி
ஜோதி

Hello DanDanakka
Great job about a great tamil leader. Keep up the good work.
You can download primopdf from
http://primopdf.com/
to convert any printable document to pdf for free.
Hope you find this useful.
Murali

பெருமதிப்ற்குரிய டண்டணக்கா அவர்களே,
தங்களின் இந்த பெரும் பணிக்கு எனது நன்றியும் பாராட்டும்.
வாழ்க வளமுடன்.
Post a Comment