Thursday, December 22, 2005
காமராஜ் - 101 [ # 9 ]
மருத்துவப் படிப்பு தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்தே பயிற்சிக்காலதில் எவ்வித உதவித்தொகையும் வழங்கப்பட்டதில்லை. பயிற்சி மருத்துவர்கள் தங்களின் தேவைகளுக்கு தங்கள் கை காசை போட்டே பயிற்சியை முடித்தனர். பயிற்சி மருத்துவர்கள் அவ்வபோது துறை சார்ந்த அமைச்சர்களிடம் எடுத்துக் கூறியும், பாறையில் முட்டிய கதையாகவே முடிந்தது.
காமராஜ் அரசில் அத்துறையின் அமைச்சரும் மாணவர்கள் தரும் விண்ணப்பத்தை வாங்குவதோடு சரி, எவ்வித தீர்வும் எடுக்கவில்லை. இந்நிலையில் பயிற்சி மருத்துவர்கள் இருபது பேர் கூடி காமரஜரை சந்தித்து தங்கள் கோரிக்கையை சொல்வதென முடிவெடுத்தனர். அக்குழுவில் இன்றைய பிரபல மருத்துவர்கள் சிலரும் இருந்தனர். அக்குழுவினர் முதல்வரை சந்திக்க தலைமை செயலகம் சென்றனர். அன்றைய பணிமுடித்து வெளியேறுகையில் காமராஜரிடம் விஷயத்தைக் கூற, உடனே அவர்களைப் பார்க்க வந்தார்.
" நீங்களெல்லாம் யாரு?" காமராஜ்.
" ஐயா நாங்களெல்லாம் ஹவுஸ் சர்ஜன்ஸ்".
" அப்படின்னா என்ன" காமராஜ்.
" ஐந்து வருஷம் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருஷம் பயிற்சி டாக்டராக வேலை பார்க்கிற்வர்கள். நாங்கதான் இந்த ஒரு வருசத்துல வருகிற நோயாளிகளை சோதிப்பது, அவசர சிகிச்சை செய்வது, இரவும் பகலும் வார்டுகளில் நோயாளிகளை பார்த்துக்கிறது. இந்த ஒரு வருஷ பயிற்சிக்கு பிறகுதான் நாங்க டாக்டரா வெளிய வேலை பார்க்க முடியும்."
" சரி ...இப்ப என்னை எதுக்கு பார்க்க வந்தீங்க" காமராஜ்.
" ஐயா, இந்த ஒரு வருச பயிற்சி காலத்துக்கு எங்களுக்கு எதாவது உதவித் தொகை STIPEND தரனும்னு கேட்டுக்கிட்டுக்கோம். மந்திரி அம்மா பார்க்குறேன், செய்றேன்னு சொல்றாங்களே தவிர எதுவும் செய்யமாட்டேங்றாங்க".
" இதென்ன அநியாயமா இருக்கு ...5 வருஷம் படிச்சுட்டு ஒரு வருசம் ஓசியா வேலை வாங்குறது சரியில்லையே... சரி நீங்க போங்க, நான் அதை என்னனு பார்க்கிறேன்" காமராஜ் அனைவரையும் குப்பிட்டு அனுப்பினார்.
நான்காம் நாள், பயிற்சி டாக்டர்களுக்கு மாதம் ரூ.105 சம்பளமும், கடந்துவிட்ட ஆறு மாதங்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டுமென்ற் உத்தரவு வந்தது.
-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: வினைச்செயல்வகை (68)
குறள்:
தூங்குக தூங்கிச் செயற்பால்; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை
பொருள்:
காலந் தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழ்த்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
டண்டணக்கா அருமையன பதிவு இவர்தான் மக்கள் தலைவர்
இது உங்கள் அரச உங்களுக்காக எதுவும் செய்யும் என வீர வசணம் பேசாமல் அமைதியாக செய்த அந்த செம்மலின் புகழ் வாழ்க

நான் இந்தப் பதிவுகளுக்குக் கருத்து இடுவதில்லை. ஆனால் தவறாமல் படித்து + போட்டுவிடுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
வாங்க என்னார்... இடையில இப்போதைய அரசியலா... நடக்கட்டும்...
வாங்க குமரன், தொடர்ந்து வந்து வாசிப்பதே சந்தோஷம், அந்த + ஓட்டுக்கு நன்றி :)
Post a Comment