Tuesday, December 20, 2005

--------

காமராஜ் - 101 [ # 8 ]

திரு எஸ்.டி.சுந்தரம் அவர்களுக்கு நெஞ்சிலே அமைதியில்லை. அல்லும் பகலும் உழைத்து, ராக்கெட் வேகத்தில் முன்னேற்றமடையச் செய்து, தமிழகத்தை இந்தியாவில் இரண்டாம் இடத்திற்க்கு கொண்டுவந்துவிட்டபோதும், பொதுத் தேர்தலில் எதிர் கட்சியாக, வெறும் மேடை முழக்க வாதிகளாயிருக்கும் திராவிட முன்னேற்ற கழகம், தன் ஆதரவு வாக்காளர் விகிதத்தை உயர்த்திக்கொண்டே வருவது புரியாத புதிராக அவரை உறுத்தியது.

அவருக்கு தோன்றியதெல்லாம், காமராஜ் அரசு தன் சாதனைகளை பாமர மக்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்லாமையே. இந்தியாவில் அதிகளவு திரையரங்குகளை கொண்டிருந்த தமிழ் நாட்டின் திரையுலகின் பெரும்பங்கை திராவிட முன்னேற்ற் கழகத்தினரே கையகப்படுத்தியிருப்பதை உணர்ந்தார். அந்த சாதனத்தை காங்கிரசும் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென முடிவெடுத்து தலைவர் காமரஜரை சென்று கண்டார்.

"ஐயா, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற சாதனைகளை நீங்களும் உங்கள் நல்லாட்சியும் செய்திருந்தாலும் நமக்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவு எதிர் கட்சிக்கே செல்வதைப் பார்க்கும் போது நாம் நமது சாதனைகளை மக்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதில் சற்றே பின் தங்கி இருக்கிறோம் என நினைக்கிறேன்" என்றார்.

அவர் கருத்தை கூர்ந்து கேட்ட காமராஜ், "சரி அதற்கென்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க?" என்று அவரிடமே யோசனை கேட்டார். அதற்க்கு கவிஞர் "ஐயா, திரைபடங்கள் மிக வலிமை மிக்க சாதனங்கள். மூலை முடுக்குகலுகெல்லாம் நாட்டு நடப்புகளை கொண்டு செல்வது அவைதான். இதை நாமும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது ஆட்சியின் சாதனைகளையெல்லாம் தொகுத்து ஒரு செய்திப் படம் ஒன்று தயாரித்து வெளியிட்டால் எல்லா தரப்பு மக்களையும் அவை சென்றடையும்." என்றார்.

" நாம்ப மக்களுக்குகாகச் செய்கிற காரியங்களை நாம்பளே விளம்பரப்படுத்தனுமா ? ... சரி, இதுக்கு எவ்வளவு செலவாகும்" என்று காமராஜ் கேட்டார்.

"சுமாரா மூனு லட்சம் இருந்தா எடுத்திரலாம்னு நினைக்கிறேன் ஐயா" என்றார் கவிஞர்.

"ஏ...யப்பா...மூனு லட்சமா? மக்கள் தந்த வரிப்பணத்தில் நமக்கு விளம்பரமா? அந்த மூனு லட்சம் இருந்தா நான் இன்னும் மூனு பள்ளிக்கூடத்தை திறந்திடுவேனே...வேண்டாம்...படமெல்லாம் எடுத்துக் காட்ட வேண்டாம்" என்று சொல்லி கவிஞரை அனுப்பிவிட்டார்.

-------------------------------------------------------------------
பால்: அறத்துப்பால்

அதிகாரம்: நீத்தார் பெருமை (3)

குறள்:
நிறைமொழி மாந்தர் பெருமை, நிலத்து
மறைமொழி காட்டி விடும்

பொருள்:
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
அருமை

நீங்க சரியான குறள் தேர்வுசெய்து, அதற்கு விளக்கமும் கொடுத்து, கர்மவீரர் அதற்கு இலக்கணமாக இருந்தாருங்கிறதையும் விளக்குவது.. ரொம்ப அருமை.

தொடருங்கள்

அன்புடன்
கீதா
 
Kamaraj kingmaker padathil varum naadu paarthathu undaa paatu kidaikkumaa.. kidaikkum idam therinjaa sollunga sir - nandri
 
காமராஜரு இவ்வளவு ஏமாளியா இருந்திருக்கின்றாரே....அவனவன் சினிமா எடுத்து கல்லா நெரப்பிக்கிட்டு இருக்கான். அத வெச்சே அரசியலுக்கும் வர்ரான். இவரு மட்டும் மக்கள் நலன் அப்படீங்குற ஒன்ன வெச்சிக்கிட்டு இருந்திருக்காரே! உண்மையிலேயே பெரிச மனுசன். பெரிய மனுசந்தாய்யா!
 
கீதா, வாங்க... வருகைக்கும் , உங்க ஊக்குவிப்பிற்க்கும் நன்றி.

தேவ், அந்த பாட்டு நம்மகிட இல்லீயே, உங்களுக்குக் கிடைச்சா நமக்கு ஒரு வரி எழுத் போடுங்க :)

புதுவை, நீங்க மட்டுமா, நானும்தான். காலம் வரும்ன்னு நம்புறேன், பார்போம்.

வாங்க ராகவன், கல்லாவ நெப்புறது மட்டுமா, அரசியலுக்கு வந்து, கல்லாவ மூட நம்ம கோவணத்தையும் உருவுறாங்களே :(
 
தமிழ் வாத்தியாரா நீங்க? தலைவனுக்கு குறள் மிகச்சரியா இருக்கா இல்ல நெறி தவறாம குறள் சென்ன மாதிரி வாழ்ந்து காட்டினரான்னு பாக்கும்போது மிக வியப்பாக உள்ளது.
என்று மறுபடி வருவானோ இவன் போல் ஒருவன்?
 
தமிழ் வாத்தியாரா.... சரியாபோச்சு, தமிழ் மொழிய பழிவாங்க ஒரு திட்டத்தோடதான் இருக்கீங்க போல :)
 
Nandri for posting this series.

Intha Pathivuku ellam -ve podupvargal....

Kadavulluey.....

Anbudan,
Natarajan
 
நல்லா எழுதியிருக்கீங்க டண்டணக்கா!!இது என்ன பேருங்க ??? பெயர்க்காரணம் தெரிஞ்சுக்கலாமா :-)
******
காமராஜ், மிகச்சிறந்த மக்கள் தலைவர்..இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் சம்பவத்தை படிக்கும்போதே புல்லரிக்கிறது.. தன்னலமில்லாது தொண்டு புரிந்தவர்... இம்மாதிரி பதிவுகள் இவரை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்ட உதவுகின்றன.. இந்த வகையில் பாராட்டுகள் உங்களுக்கு.. தொடருங்கள் உங்கள் அறப்பணியை !!
 
வாங்க நடராஜன், வருகைக்கு நன்றி.
மைனஸ் ஓட்டுக்கெல்லாம் என்ன பண்றது... சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியததுதான் :)

வாங்க சோம்பேறி பையன் (எனக்கு பெரும் போட்டின்னு நினைக்கிறேன் :)...), வருகைக்கு நன்றி.
பெயர் காரணம் பத்தி, முன்ன நண்பர் காசிக்கு சொன்ன அதேதான்..."பெயர்க்காரணமெல்லாம் நம்மகிட்ட இல்லீங்க, தோணிச்சு... வைச்சேன், அவ்வள்வுதான் :)", சும்மா ஜனகராஜ் மாதிரி "டண்டணக்கா...டண்டணக்கா.." சொல்லீட்டு போய்கிட்டே இருக்கனும், ஆராயெல்லாம் கூடாது.

தொடர்ந்து வாங்க ...
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?