Tuesday, December 20, 2005
காமராஜ் - 101 [ # 7 ]
அன்று காமராஜரை பார்க்க வந்தவர் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி. தன் இல்லத் திருமணத்திற்க்கு வரவேண்டுமென்று கேட்டு அழைப்பிதழோடு வந்திருந்தார். அவரை அழைத்து அமரச் செய்து நலங்கேட்டார். அதே நேரத்தில் அவருடைய வசதியற்ற வாழ்க்கை நிலையை அவரது சொற்கள் மூலமாக புரிந்து கொண்டார்.
தனது உதவியாளரை அழைத்துக் கேட்பது போலக் கேட்டு அந்த திருமணனாளில் தனக்கு வேறு அலுவல் இருப்பதாகக் கூறி விழா சிறப்பாக அமையத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து அனுப்பிவிட்டார். வந்தவர் மனம் மிக வருந்தி விடைப்பெற்றார். ஆனால் அவருடைய உள்ளத்தில் " ஹூம் ... காமராஜ் இன்று பெரிய தலைவராகி விட்டார். அந்தக் காலத்தில் நாமும் அவரோடு போராட்டங்களில் ஈடுபட்டோம். ஒரே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தோம். ஆனால் இன்று மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் எற்பட்டுவிட்ட நிலையில் ஏழையான தன் வீட்டுக்கு வருவதற்கு அவரது அந்தஸ்த்து இடம் தருமா?" என்றெல்லாம் எண்ணியவண்ணம் ஊர் போய் சேர்ந்தார்.
விழா நாளும் வந்தது. அந்த சிற்றூரில் தன் பொருளாதார வசதிக்கேற்ப மிக எளிமையாக விழாவை நடத்திக் கொண்டிருந்தார். திடீரென அந்த வீதியில் பரபரப்பு, ஆரவார ஒலி கேட்டு அந்த தியாகி வெளியே வந்தார். அவர் கண்களையே நம்ப முடியவில்லை. வந்து நின்ற காரிலிருந்து காமராஜ் இறங்கினார். புன்னகை பூத்தமுகத்தோடு தியாகியின் கைகளைப் பற்றினார்.
தியாகிக்கோ கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அவரைத் தட்டிக் கொடுத்த வண்ணம், 'வா, விழா மேடைக்குப் போவோம்' என்று கூறிய வண்ணம் மண்டபத்தின் உள்ளே சென்றார், மணமக்களை ஆசீர்வதித்தார். அவரைச் சரியான ஆசனத்தில் கூட அமர்த்த முடியவில்லையே என்று அந்தத் தியாகி ஏக்கத்தோடு செயலற்று நின்றார்.
அப்போது காமராஜ் பேசினார். "நீ அழைப்பிதல் கொடுத்த அன்றைக்கே நான் வர்றதுக்கு முடிவு செஞ்சிட்டேன். ஆனா நான் அப்பவே வர்றதாச் சொல்லியிருந்தா முதலமைச்சரே வர்றார்ன்னு சொல்லி கடனை வாங்கித் தடபுடலா பண்ணியிருப்ப, உன்னை மேலும் கடன்காரனாக்க நான் விருப்பல. இப்ப வந்துட்டேன், உனக்கு திருப்தி தானே" என்றார். கூடியிருந்த கூட்டத்தை பெருமிதத்தோடு பார்த்தார் அந்தத் தியாகி.
"சரி...வரட்டுமா... மேல் கொண்டு காரியத்தை கவனி" என்று சொல்லி விட்டு விடை பெற்றார் காமராஜ்.
நட்பில் பழைமை என்ற ஒரு அதிகாரத்தையே எழுதிய வள்ளுவரின் வைர வரிகளுக்கு ஓரிலக்கியமாகத் திகழ்ந்தவர் காமராஜ்.
-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: பழைமை(81)
குறள்:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
பொருள்:
பழைய நட்பை மறவாது பொற்றுபவர், பகைவராலும் விருப்பப்படுவார்.

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
உண்மையான மக்கள் தலைவர் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொண்டு வராத தன்னலமற்ற தலைவர் இதனால் தான் இன்னமும் நம்முடன் வாழ்கிறார்.
தலைப்பே 'தலைவன் என்றொரு தமிழ் வார்த்தை';
இதில் 'அரசியல்' எங்கே புகுந்தது?
திரு.'டோண்டு' சொல்வது சரிதான்!
இப்போது 'அரசியல்' பண்ணுவர்களோடு ஒப்பிடும்போது, அவரை எப்படி 'சிறந்த அரசியல்வாதி' என ஏற்றுக்கொள்ள முடியும்?!!!!
அவரது 'மனித நேயத்தைப்' பாருங்கப்பா!

long long back one mr namasivayam has written a series f articles in kumudham laterit was published in book form
aladi aruna's book on kamaraj may also help you
keep it up

வாங்க என்னார், வருகைக்கு நன்றி. நம்முடன் தொடர்ந்து வாழ வேண்டுமென்பதே எனது விருப்பமும்.
வாங்க chinnathambi, முதல்ல வயச சொல்லுங்க, அப்புறமா நான் அண்ணன்தானானு முடிவு பண்ணலாம்:)
வாங்க SK, வருகைக்கு நன்றி.
sivagnanamji, thanks for the reference. I thought of buying Aladi Aruna's book on my last visit to home. But, bought couple other things and missed it. This time it's definitely in my list.

ஆகா! ஆகா! மக்கள் தலைவன் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எடுத்துக்காட்டிவிட்டுப் போயிருக்கிறார் ஒரு மாமேதை. அவர் புகழைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா!
இந்தப் பதிவுகளுக்கு நன்றி டண்டணக்கா.... (நீங்க அக்காவா, அண்ணனா? டண்டண் அக்கான்னு பேர் இருக்கே). என்னை மாதிரி காமராஜர் ஆட்சி காலத்திற்கு பின்னால் பொறந்தவங்களுக்கு அவரைப் பத்தி தெரிஞ்சிக்க நல்ல வாய்ப்பு.
வாங்க டண்டணக்கா, ஆகஸ்ட்டுக்கு அப்புறம் டிசம்பர் வருதோ உங்க காலண்டர்ல? என்ன இவ்வளவு கேப்பு? டெம்ளேட்டும் தலைப்பும் அமர்க்களமா மாத்தீட்டீங்க. தொடரவும்.
வாங்க ராகவன், தொடர்ந்து வர்ரீங்க போல, சந்தோஷம்.
குமரன், முதல் முறையா வர்ரீங்க, வருகைக்கு நன்றி. டண்டண்+அக்கா -வா ...என்ன சொல்றது, திருப்பாவை பற்றி எழுதி எழுதி, எல்லாத்தையும் இலக்கிய ரீதியா அப்ரோச் செய்றீங்க, வெளிய வாங்க. சும்மா ஜனகராஜ் மாதிரி "டண்டணக்கா...டண்டணக்கா.." அப்டீன்னு சொல்லுங்க. மத்தபடி அண்ணனுமில்ல, அக்காவுமில்ல... தம்பிங்க. நீங்களாவது காமராஜின் ஆட்சி காலத்திற்க்கு பிறகு பிறந்தீர்கள், நான் அவர் வாழ்ந்த காலத்திற்க்கு பின்பு வந்தவன்.
சுரேஸ், என்ன பண்றது ... நம்ம சோம்பேறித்தனம் காலத்தை வென்றது :)
டெம்ளேட்டும் தலைப்பும் பற்றிய கமெண்டுக்கு நன்றி, எனக்கும் புடிச்சிறுக்கு.

வாங்க மதி, வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி. இடைவெளி ஏற்படாவண்ணம் முயற்சிக்கிறேன்.
Anony, Thx.
வாங்க நடராஜன், என்னதிது??? சார் மோரெல்லாம், தொடர்ந்து வாங்க.
Post a Comment