Friday, December 30, 2005

--------

காமராஜ் - 101 [ # 14 ]

தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பழக்கமிருந்தது, சபரிமலை அய்யப்பன் என்ற கேரள மாநிலக் கோயிலுக்கும், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கும் தரும் முக்கியம் நமது தமிழகத் தெய்வங்களுக்கு தருவதில்லை.

இந்த பக்தி விசயம் தமிழகத்தை பொருளாராதரீதியாகவும் பாதித்து வருகிற ஒரு விஷயம். திருப்பதி ஏழுமலையானின் உண்டியல் வருமானம், பழனி திருக்கோயில் பெரும் வருமானத்தைவிட பல நூறு கோடிகள் அதிகம்.

காமராஜர் காலத்திலும் இதே நிலைதானிறுந்தது. திருமலைப் பிள்ளை வீதியில் வாழ்ந்த தலைவர் இதை எண்ணி ஆதங்கப்பட்டார். ஆன்மீகத் திருக் கூட்டம் தன்மீது வசை பொழிந்தாலும் பரவாயில்லை என்று ஒதுக்கிவிட்டு தன் மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பேசினார் " தமிழ் நாட்டு பக்தர்கள் மிக அதிக அளவில் காணிக்கையை திருப்பதி கோயில் உண்டியலில் கொண்டுபோய் செலுத்துகிறார்கள். நம் நாட்டு ஸ்ரீரங்கம் எந்த வகையில் திருப்பதிக்கு குறைந்தது கிடையாதே... உங்கள் காணிக்கையை ஸ்ரீரங்க உண்டியலில் போட்டால் நம் நாட்டுக்கு பெரிய பயனாக இருக்கும். மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல காரியங்களுக்குப் பயன்படும். நம்ம சாமியும் பெரிய சாமிதான்" என்பதே காமராஜின் வேண்டுகோள்.

-------------------------------------------------------------------

பால்: பொருட்பால்

அதிகாரம்: அவை அஞ்சாமை(73)

குறள்:
வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.

பொருள்
சொற்களின் தொகையறிந்த தூய அறிவுடையவர், கற்றோர் அவையில் அஞ்சாமல் சொல்லின் வகையறிந்து வாய் சோராமல் பிழையின்றி பேசுவர்.
-------------------------------------------------------------------

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]

நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.

Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
இதை நான் கோள்விப்படவில்லை
 
இது மாதிரி பெருந்தலைவர் பேசியதில்லை. அவர் பேரைச் சொல்லி இந்த அபத்தமான கருத்தை முன் வைக்காதீர்.



அபத்தம். 1

தமிழ்நாடு, கேரளா என்றெல்லாம் இப்பொழுது ஆயிற்று. சேரநாடாக இருந்தபோது கேரளா தமிழகம் இல்லையா.

மனிதனின் மனசு ஒரு செயற்கையான கோடு கிழித்தவுடன் எவ்வளவு குறுகிறது.

இரண்டாவது அபத்தம்; கோயிலுக்கு பைசா போட்டால் மக்களுக்கு எதற்காக பயன்பட வேண்டும். கோயிலில் பக்தனின் காணிக்கை இறைவனுக்கும், பக்தனுக்கும் உள்ள ஒரு புனிதமான நம்பிக்கை ஆதாரம். அதை எடுத்து அரசாங்கம் நடத்துகிறேன் என்று பாழ்படுத்துவது எந்த நியாயம். இது மாதிரி மசூதி பைசாவைப் பற்றி பேச இந்த அரசியல்வாதிகளுக்கு தெம்பு உண்டா. பருப்பு வெந்து விடும்.

நன்றி

ஜோதி
 
வாங்க என்னார், இது காமராஜ் பற்றிய அரு.சங்கர் அவர்களின் புத்தகத்தில் குறிப்புள்ளது. அப்படியே, உங்க நண்பர்கள் வட்டாரத்துல விசாரிச்சு பாருங்க, மே பி இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கலாம்... கிடைச்சா சொல்லுங்க :)

வாங்க செந்து, வருகைக்கு நன்றி, அது நான் சொன்னதில்லப்பா, காமராஜ் சொன்னது :)

வாங்க ஜோதி, மேலே சொன்ன மாதிரி இது அரு.சங்கர் தனது புத்தகத்தில் கூறியுள்ள நிகழ்வு. நான் படித்த வரையில், அரு.சங்கர் பெருந்தலைவருடன் நேரடியாக, நெருக்கமாக பழகியவர். மற்றபடி இதில் எனது கருத்தின் இடை செருகல் எதுவும் இல்லை. அப்படி ஏதும் நடக்க கூடாதுன்னுதான் என்னோட வலைபதிவில் எழுதி வந்த இந்த தொடரை தனியாக இங்க ஆரம்பித்தது :). மொழிவாரி மாநிலமெல்லாம் (கேரளா, ஆந்திரா ...) 1956 லயே வந்துருச்சு. மற்றபடி கோயில் பணம் அந்த பகுதி மக்களுக்கு பயன்படும் என்பது நிகழ்கால உண்மை. எந்த அரசும் கோயில் பணத்தை நேரடியா எடுத்து செலவழிக்காது (நானறிந்த வரையில்!!!), ஆனால் ஒரு ட்ரஸ்ட் ஒன்னு பார்ம் பண்ணி, அது மூலம் மருத்துவமனை, காலேஜ் எல்லாம் நடக்கும்னு நினைக்கிறேன். மேலும் அவ்வளவு பணம் புழங்கள் ஒரு எக்கனாமிக் கிரியா ஊக்க்கிதான். மற்றபடி ஒரு கருத்தின் மீது மாற்றுகருத்து என்பது சகஜம்தான்.
 
அன்பு நண்பர் டண்டணக்கா! ஒரு சின்ன வேண்டுகோள்! உங்க உண்மையான பேரை வச்சி இந்த கட்டுரையை கொண்டு போனால் என்ன. உங்க ப்ரொபைலில் போய் மாற்றினால் போதுமே?. நல்ல தலைவரை பற்றி பேசும் போது, உங்கள் டண்டணக்கவை பார்த்து நிறைய பேர் படிக்காமல் போய்விடும் வாய்ப்பு இருக்குதே. இதை ஒரு நண்பனாக இதை எடுத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள். முடிந்தால் பாருங்கள்.

உங்க டெம்லேட்டை இன்னும் அழகு படுத்தினால், இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கும். படிப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும். நான் அட்வைஸ் பண்ணவில்லை. தயவு செய்து இதை ஒரு கருத்தாக எடுத்துக்கொள்ளுங்கள்.

மேலும் தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்.
சிவா
 
அன்பு நண்பர் டண்டணக்கா! ஒரு சின்ன வேண்டுகோள்! உங்க உண்மையான பேரை வச்சி �
 
சிவா, ஊரு அமைதியா இருந்தாலும், நம்ம பேர பிரச்சனையாக்காம விடுறதில்லன்னு கங்கனம் கட்டிறிக்கீங்க போல :::)))) (சும்மாதான்).
நீங்க சொல்றதுல தப்பா எடுத்துக்க ஒண்ணுமில்லீங்க...அப்புறம் அந்த மெயில தட்டுங்க, பேசுவோம்.
டெம்லேட்டை எப்டி அழகு படுத்தலாம்னு டிப்ஸ் குடுங்க, பண்ணிடலாம்.

அனானி, நீங்களும் சேர்ந்தாச்சா சிவாவோடு :::))))
 
Post a Comment



<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

This page is powered by Blogger. Isn't yours?