Thursday, December 29, 2005
காமராஜ் - 101 [ # 12 ]
அந்த அமைச்சர் சார்ந்த துறையில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரு மனக்குறையிருந்தது. தனது அறைக்கு அழைத்து பேச வரும் அதிகாரிகளுக்கு ஆசனம் கூட தராமல், நீண்ட நேரம் நிற்க்க வைத்தே பேசிவிட்டு அனுப்பினார் அமைச்சர்.
அதிகரிகளுக்கு இந்த மனக்குறையை முதல்வரிடமே முறையிடுவதென முடிவெடுத்து ஒரு அதிகாரியை காமரஜரிடம் அனுப்பினர். அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச்செய்து, வந்த விவரங் கேட்க, அவர் அமைச்சர் தங்களை அவமதிப்பது போல் நடந்துகொள்ளும் விசயத்தைக் கூறினார்.
கேட்ட காமராஜ், " அந்த தம்பி அப்படியா நடந்துக்கிறார், அது தப்பாச்சே" என சொல்லிய வண்ணம் அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்து தனது அறைக்கு வருமாறு கூறினார்.
அந்த அதிகாரிக்கு சங்கடமாகிவிட்டது, நேரிடையாக அமைச்சரிடம் கேட்டு கடிந்து கொள்ளப்போகிறார் என பயந்துவிட்டார்.
இதற்குள் அமைச்சரும் வந்துவிட்டார். அந்த அதிகாரி எழுந்து நிற்க்க, காமராஜ் " நீங்க உட்காருங்க!" என்று சொல்லியவண்ணம் வந்த அமைச்சரையும் பக்கத்து இருக்கையில் அமரச் சொல்லிவிட்டார்.
பின்னர் அமைச்சரின் துறை சார்ந்த ஒரு திட்டம் பற்றி விவாதிப்பது போல பேசி " சரி, நல்லா பார்த்துக்கோங்க!" என்று சொல்லி அமைச்சரை அனுப்பிவிட்டார்.
அமைச்சர் சென்ற பின்பு, அந்த அதிகாரியை பார்த்து " இனி நீங்க போகலாம்... உங்களுக்குறிய மரியாதை இனி கிடைக்கும்" என்று அனுப்பிவைத்தார்.
அதுமுதல் அமைச்சரின் நடவடிக்கையில் மாற்றம்.
முதல்வர் எவ்வளவு நளினமாக நடந்துக்கொண்டு தங்கள் உள்ளக்குமுறலைத் தீர்த்து வைத்தார் என்பதையெண்ணி அதிகாரிகளனைவரும் வியந்தனர்.
-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: சொல்வன்மை (65)
குறள்:
பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்
பொருள்:
சொல்ல வேண்டியவற்றை சில சொற்களால் சுருங்கச் சொல்லத் தெரியாதவர் வீணாகப் பல சொற்களால் விரித்துப் பேசுவார்.

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
இப்படி ஒரு தலைவரை யார் சார் இனி காணப்போகிறோம் நல்ல வேலை அவரது கையைத் தொட்டு வணங்கிய பாக்கியம் எனக்கு கிடைத்தது அவரிடம் ஒருமுறை ஒரு ரூபாயும் அடுத்தமுறை ரூ100யையும் தேர்தல் நிதியாக கொடுத்த பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.
நல்ல சமயோசித புத்தியுள்ளவரய்ய அந்த மாமனிதர்

ஓ... நீங்க காமராஜ் காலத்தவரா... நமக்கு தெரியாம போச்சு... நல்ல ஒரு தலைவனை நேரில் பார்ப்பதும், சந்திப்பதும் ஒரு சந்தோஷமான் விஷயம்தான். நாங்களெல்லாம் புத்தகத்தில் பார்த்ததோடு சரி ....
டண்டணக்கா! கெட்டவன் மனசு கூட நோகாம நடந்துக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறாரே. அவர் தாம்யா மனுசன்.
என்னார், கொடுத்து வச்சவங்கய்யா நீங்க. நான் கூட காமராஜர் பிறந்த நாளில் பிறந்தவன் தான். சின்ன சந்தோசம் :-)
Post a Comment