Wednesday, December 28, 2005
காமராஜ் - 101 [ # 11 ]
காமராஜ் முதலமைச்சராக இருந்த போது மதுரைக்கு சென்றார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் மாளிகையிலோ இரவு மின்சாரம் இல்லை. ஊழியர்கள் வந்து பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். காத்திருந்த காமராஜ், " கட்டிலைத் தூக்கி மரத்தடியில் போடு" என்றார்.
அறைக்குள்ளிருந்த கட்டிலை வேப்பமரத்தடியில் கொண்டுவந்து போட்டார்கள்.
காமராஜ் படுக்க வந்தார். கட்டில் அருகே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.
" நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய்ப் படு" என்று போலிஸ்காரரை அனுப்பிவைத்த காமராஜ் சில நொடிகளில் உறங்கிவிட்டார்.
இந்த எளிமை உலக வரலாற்றில் எந்த மக்கள் தலைவரிடமும் காண்பது அரிது.
-------------------------------------------------------------------
பால்: பொருட்பால்
அதிகாரம்: சான்றான்மை (99)
குறள்:
ஊழி பெயரினும் தாம்பெயரார், சார்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்
பொருள்:
சான்றான்மை எனப்படும் கடலுக்கு கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தான் மாறமாட்டார்.

- By: டண்டணக்கா
[ இந்த "காமராஜ் - 101" பதிப்புகள் தொடரும் ]
நண்பர்களே ஒரு வேண்டுகோள், உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில், மறக்காமல் நட்சத்திரத்தில் ஓட்டு போடவும், உங்களின் ஓட்டு இப்பதிப்பை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்து செல்ல உதவும்.
Courtesy/Credit:
All credit for the information *absolutely* goes to those authors listed in the resources. My part in this, is nothing more than gathering those information from different sources and presenting is better format. These sources were immensely helpful and made possible this blog series.

Comments:
<< Home
இன்றுள்ளவர்கள் ஏ கே 47 உடன் பத்து கருப்பு பூனை ஊதாபூனை என பலரை நிற்க வைத்துவிட்டு துங்காமல் தவிப்பர்
காமராஜர் பற்றி இன்று நினைத்தாலும் மனம் அயர்கிறது.
என்ன மாமனிதன்!
ஆனால், அவன் வாழ்ந்தபோதே, தன் கட்சியினரால் தூக்கி எறியப் பட்டவன். லட்சியத்துக்கும், லட்சத்துக்கும் நடக்கும் போட்டியில் எப்போதும் லட்சியமே தோற்கிறது.
தங்கள் மேலான பதிவுகளுக்கு மிக்க நன்றி!
வாழ்த்துக்கள்!
ஜோதி

வாங்க ஜோதி, வருகைக்கும் வாழ்திற்கும் நன்றி. மத்தபடி தூக்கியெறியப்பட்டாரா??? இந்திரா காங்கிரஸ் ... எமர்ஜென்ஸி ... வந்தபோது நிகழ்ந்த நிகழ்வுகளை பற்றி சொல்றீங்களா??? புரியல...
Post a Comment
<< Home